சனி, 25 ஜூன், 2011

2ஜி: ஜூலையில் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி வழக்கில் வருகிற ஜூலை முதல்வாரத்தில் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது.

2ஜி ஊழல் வ்ழக்கில் பிரதான குற்றப்பத்திரிகையை தொடர்ந்து, துணை குற்றப்பத்திரிகை ஒன்றை சிபிஐ ஏற்கனவே தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு சிங்கப்பூர், சைப்ரஸ், மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்று 2ஜி வழக்கில் தொடர்புடையார்களின் வங்கி பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தி வந்தது.

இதில் கிடைத்த முக்கியத் தகவல்களின் அடிப்படையில் இரண்டாவது துணைக் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.

அநேகமாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: