வியாழன், 9 ஜூன், 2011

இங்கிலாந்தில் 40 இந்திய பணியாளர்கள் கைது

இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் சட்டவிரோதமாக பணியாற்றிவந்ததாக 40 இந்தியர்களை பிரிட்டிஷ் குடியுரிமைத் துறை கைது செய்துள்ளது. அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என அந்தத் துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெய்செஸ்டர் நகரில் உள்ள 12 ஜவுளி நிறுவனங்களில் இங்கிலாந்து எல்லை அமைப்பு திடீர் சோதனைகளை நடத்தியதாகவும், அதில் 40 இந்தியப் பணியாளர்கள் சட்டவிரோதமாக பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்பகுதியில் பெரிய அளவில் நடத்தப்பட்ட சோதனை இது என பிரிட்டனின் குடியுரிமைத் துறை அமைச்சர் டேமியன் கிரீன் தெரிவித்தார்.

மேலும் இதேபோல் சோதனைகள் நடத்தி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வெளியேற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: