செவ்வாய், 21 ஜூன், 2011

55 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் தரத் திணறும் ஏர் இந்தியா!


தனது 55 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் திணறி வருகிறது ஏர் இந்தியா நிறுவனம். இதனால் ஊழியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடப் போவதாக மிரட்டியுள்ளனர்.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து மே மாத சம்பளத்தை வரும் வியாழன்கிழமை தர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏர்இந்தியா நிறுவனத்தில் 40 ஆயிரம் நிரந்தர ஊழியர்களும், 15 ஆயிரம் தற்காலிக ஊழியர்களும் பணியில் உள்ளனர். மே மாதத்துக்குரிய சம்பளம் ஜூன் 8-ந்தேதிக்குள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 21-ந்தேதி ஆகிவிட்ட நிலையில் இன்னும் மே மாத சம்பளம் கொடுக்கப்படவில்லை. ஏர்-இந்தியா ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் ஒருங்கிணைந்து கோரிக்கை விடுத்தும் சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனால் ஏர்-இந்தியா ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மே மாத சம்பளத்தை உடனே தராவிட்டால் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக ஊழியர்கள் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஏர்-இந்தியா அதிகாரிகள் 24-ந்தேதிக்குள் சம்பளம் தந்து விடுவதாக உறுதி அளித்துள்ளனர். அரசுத் தரப்பிலிருந்து 11-ம் தேதிதான் நிதி வந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: