வெள்ளி, 3 ஜூன், 2011

சீமான் மீது கற்பழிப்பு உள்பட 6 பிரிவுகளில் வழக்கு-கைதாவாரா?

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைதாவாரா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி இயக்குநர் சீமான் மீது திடீரென பரபரப்புப் புகாரைக் கொடுத்துள்ளார். அதில் தன்னைக் காதலித்ததாகவும், ஆனால் திருமணம் செய்யாமல் ஏமாற்ற முயல்வதாகவும் சீமான் மீது புகார் கூறியுள்ளார் விஜயலட்சுமி.

இதையடுத்து வளசரவாக்கம் போலீஸார் நேற்று விஜயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

அப்போது, வாழ்த்துகள் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் தனக்கும் சீமானுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும், இது பின்னர் காதலாக மாறியதாகவும் கூறினார் விஜயலட்சுமி.

மேலும், தொலைபேசி மூலமும், ஷூட்டிங் ஸ்பாட்டுகளிலும் தாங்கள் பேசி காதல் வளர்த்ததாகவும் கூறினார் விஜயலட்சுமி. தாங்கள் பழகியதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறிய விஜயலட்சுமி அதை போலீஸாரிடம் கொடுக்கவில்லை. மாறாக, உரிய நேரத்தில் தருவேன் என்று கூறினார்.

இதைப் பதிவு செய்து கொண்ட போலீஸார் தற்போது விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில் சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சீமானைக் கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: