சனி, 18 ஜூன், 2011

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க 81% ஆதரவு

ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக மக்களில் 81 விழுக்காடு பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இலங்கை பிரச்சனை தொடர்பாக சென்னை லயோலா கல்லூரியின் ஊடகத் துறையின் சார்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளதாக அத்துறையின் தலைவர் பேராசிரியர் இராஜநாயகம் கூறியுள்ளார்.
இதேபோல், தமிழ்நாட்டிற்குச் சொந்தமாக இருந்த கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசை தன்னை இணைத்துக்கொள்வது என்று நிறைவேற்ற்ப்பட்டத் தீர்மானத்திற்கு ஆதரவாக 63 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 3,100 பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகளை பேராசிரியர் இராஜநாயகம் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றியது போல், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவித்து இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 69 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு என்று கருத்துத் தெரிவித்தவர்களில் 65 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.
http://tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை: