திங்கள், 6 ஜூன், 2011

விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 900 முன்னாள் போராளிகளில், 360 பேர் மட்டுமே விடுதலை

தமிழீழ விடுதலைபுலிகளின் முன்னாள் போராளிகளில் சுமார் 900 ஆயிரம் பேர், இன்று விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் இன்று 360 முன்னாள் போராளிகள் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக நேற்று சனிக்கிழமை இலங்கை அரசாங்கம் பெரும் விழா ஒன்றையும் வவுனியாவில் ஒழுங்கு செய்திருந்தது. அத்துடன், இதற்காக விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட 900 முன்னாள் போராளிகளும் அழைத்து வரப்பட்டனர். எனினும் இன்று 360 முன்னாள் பேராளிகள் மாத்திரமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை படையினர் உரிய பதில்கள் எதனையும் வழங்கவில்லை என்று விடுவிக்கப்படாத முன்னாள் போராளிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தமது உறவுகள் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தாம் கடந்த மூன்று நாட்களாக வவுனியாவில் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தங்கியிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும் சர்வதேச ரீதியில் 900 முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இன்று இணைப்பதாக இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்து வந்தது.

http://www.tamilwin.com

கருத்துகள் இல்லை: