புதன், 1 ஜூன், 2011

தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும்: ஜெயலலிதா

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை பிரதமர் மன்மோகன் சி்ங் பதவி விலகச் சொல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, தயாநிதி மாறன் பிரதமரைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாநிதி மாறன் தன் மீதுள்ள குற்றச்சாடுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர் பதவி விலக வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் அவரிடமிருந்து பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

தனியார் பள்ளிகள் கட்டண விவகாரத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் தரப்பில் இருந்து புகார் வந்தால், உடனடியாக தொடர்புடைய பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஜிபி நட்ராஜ் விஷயத்தில் ஆணை பெறப்பட்டவுடன் தகுந்த முடிவு மேற்கொள்ளப்படும் என்றார்.


கருத்துகள் இல்லை: