திங்கள், 6 ஜூன், 2011

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் பதவி பறிபோகும் நிலையில்?

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவரது பதவியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார் என்று கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு கடந்த மாதம் அவர் மேற்கொண்டிருந்த பயணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து ஜனாதிபதி அவர் மீது கடும் சீற்றம் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

அமைச்சர் பீரிஸின் இந்தியப் பயணத்தின் இறுதியில் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "நேர்மையான நல்லிணக்கத்துக்கு இலங்கை அரசு தயார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை எந்த ஓர் அரச அறிக்கையிலும் "நேர்மையான நல்லிணக்கம்' என்ற பதம் பாவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டும் ராஜதந்திர வட்டாரங்கள், அப்படி ஒரு பதம் பயன்படுத்தப்பட பீரிஸ் எப்படி அனுமதித்தார் என்று ஜனாதிபதி ஏனைய அமைச்சர்களிடம் சீறினார் என்கின்றன.

அமைச்சர் பீரிஸ் தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ளார். அவர் நாடு திரும்பியதும், வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி முடிவு செய்திருக்கிறார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilwin.com


கருத்துகள் இல்லை: