திங்கள், 27 ஜூன், 2011

டெல்லியில் ஸ்டாலின்-கனிமொழியை சிறையில் சந்தித்தார்

2ஜி விவகாரத்தில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் தனது சகோதரி கனிமொழியை இன்று சந்தித்துப் பேசினார் திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின்.

2ஜ விவகாரத்தில் கனிமொழி எம்.பி.யும், கலைஞர் டிவி இயக்குனர் சரத் குமாரும் கைது செய்யப்பட்டு கடந்த 1 மாதமாக திகார் சிறையில் உள்ளனர். கருணாநிதி இரண்டு முறை திகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார். இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று விமானம் மூலம் டெல்லி புறபட்டுச் சென்றார்.

டெல்லி சென்றதும் அவர் திஹார் சிறைக்குச் சென்றார். அங்கு தங்கை கனிமொழியைச் சந்தித்துப் பேசினார். ஸ்டாலினுடன் திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இந்த சந்திப்பு உணர்ச்சிகரமாக இருந்ததாக சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின், கனிமொழி சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.

கனிமொழியைச் சந்தித்த பின்னர் முன்னாள் அமைச்சர் ராசா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் ஸ்டாலின் சந்தித்தார்.

கனிமொழி கைது செய்யப்பட்ட பின்னர் அவரை ஸ்டாலின் சந்திப்பது இது 2வது முறையாகும். ஏற்கனவே கடந்த மே மாதம் 24-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வைத்து கனிமொழியை சந்தித்தார்.

முன்னதாக மகளைப் பார்த்துவிட்டு வந்த கருணாநிதி கனிமொழி சிறையில் உடல் வீக்கத்தாலும், கொப்பளங்களாலும் கஷ்டப்படுவதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in/news/2011/06/27/m-k-stalin-leaves-delhi-likely-meet-kanimozhi-aid0128.html

கருத்துகள் இல்லை: