திங்கள், 6 ஜூன், 2011

இந்தியா அழுத்தம் கொடுத்தாலும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லை! அரசாங்கம் திட்டவட்டம்

இந்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலின் அடிப்படையில், வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் வகையில் கொண்டு வரவிருந்த சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெற்றுக்கொண்டது

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசியலமைப்பின் 20 வது சட்டத்திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்தது. எனினும் அதனை தற்போது இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்கப் போவதில்லை என்று தீர்மானித்துளளதாக லங்காதீப செய்திதாள் தெரிவித்துள்ளது.

தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பைப் போன்று இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் எதிர்ப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினால் அதனை திரும்பப்பெற்றுக்கொண்டதாக இலங்கை அரசாங்கத் தரப்பு தெரிவித்தது.

அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை முன்வைப்பதனால் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்படும். இந்தநிலையில் இந்தியா எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் தற்போதைக்கு அதிகாரப் பகிர்வு குறித்த சட்ட மூலங்களை சமர்ப்பிப்பதில்லை என்று இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கும் நோக்கில் முன்வைக்கப்படவிருந்த 19ம் திருத்தச் சட்ட மூலமும் திரும்பப்பெற்றுககொள்ளப்பட்டுள்ளது.

தமக்கு சாதகமான அடிப்படையில் பிரதம நீதியரசராக ஷிரானி பண்டாரநாயக்கவை நியமித்த நிலையிலேயே அந்த 19 ஆம் அரசியல் அமைப்பு சீர்திருத்தமும் மீள்ப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது

http://www.tamilwin.com

கருத்துகள் இல்லை: