புதன், 1 ஜூன், 2011

தொண்டர்களுக்காக நகை அணிகிறேன் : முதல்வர் விளக்கம்

தொண்டர்களுக்காக நகை அணிவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுரை காதில் தோடு அணியாத தாங்கள் தேர்தல் வெற்றிக்குப் பிறகு எப்படி நகை அணிய ஆரம்பித்தீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா : தான் 1997ம் ஆண்டுக்குப் பின்னர் தான் நகைகள் அணிவதில்லை என்றும் ஆனால் தொடர்ந்து தொண்டர்கள் தான் நகை அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாலும், இல்லையேல் தீக்குளிப்போம் என மிரட்டியதாலும் தான் நகைகள் அணிவதாக கூறினார். தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து 14ம் தேதி முதல் காதில் தோடு அணிந்து கொள்வதாக கூறினார்.

கருத்துகள் இல்லை: