ஞாயிறு, 19 ஜூன், 2011

கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான்-சுப்ரமணிய சாமி

அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் கூட, கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என தெரிவித்துள்ளனர். அங்கு சமஸ்கிருதம் கற்க ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது என்று ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.

மதுரைக் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியர் சுப்ரமோனி எழுதிய பரமஹம்சா-த வேதாந்திக் டேல் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நூலை வெளியிட்டுப் பேசிய சாமி,

அமெரிக்காவில் பொருளாதார மேம்பாடுக்கு உதவும் இந்துத்துவா கொள்கை என்ற தலைப்பில் என்னை பேச அழைத்தனர். அந்தளவுக்கு அமெரிக்காவில் இந்துத்துவா, சனாதன தர்மத்தை கை பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தான் இந்திய ஆசிரமங்களில் அமெரிக்க சாதுக்கள் அதிகளவில் உள்ளனர்.

திராவிட இனம் என கருணாநிதி போன்றோர் பேசுகின்றனர். திராவிட இனம் என்ற ஒன்றே இல்லை. திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர் அவ்வளவு தான்.

தென்னிந்தியாவின் ஒரு பகுதி திராவிடம் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். ஆங்கிலேயர் தான் திராவிடர், ஆரியர் என்ற இன பாகுபாட்டை ஏற்படுத்தினர்.

ராவணன் ஒரு பிராமணர். ஆனால் ராமர் சத்தியர் குலத்தில் தோன்றியவர். ராவணனை கொன்ற ராமரை தான் மக்கள் வழிபடுகின்றனர்.

அனைவரும் சட்டத்திற்கு, தர்மத்திற்கு கட்டுப்பட வேண்டும். முன்னோர்கள் தர்மத்திற்கு முக்கியம் கொடுத்தனர். பிறப்பு, நிறம், மொழியை வைத்து வேறுபாடு கூடாது.

சமஸ்கிருதம், தமிழ் போன்றவை பிராமி எழுத்துக்களில் இருந்து உருவானவை. அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்.

அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் கூட, கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் என தெரிவித்துள்ளனர். அங்கு சமஸ்கிருதம் கற்க ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

ஊழலுக்கு காரணம் பேராசை. வீடு, வாகனம் வாங்கும் ஆசையே ஊழலுக்கு வழிவகுக்கிறது.

மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். இந்தியாவில் இளைஞர் வளம் அதிகம் உள்ளதால் அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கு அரசு உதவிகளை செய்ய தயங்க கூடாது என்றார்.
http://thatstamil.oneindia.in

1 கருத்து:

மாசிலா சொன்னது…

Please sir, you would not simply pick and paste such as the S. Swami's idioties. As a tamil willing people you must always give your vision on the article. However, I understand your aim and the reason of the post. I welcome it.