வியாழன், 23 ஜூன், 2011

மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: கருணாநிதி

சென்னை:"கனிமொழியை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைத்துள்ளனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

கருணாநிதி சென்னையில் நேற்று அளித்த பேட்டி:சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி., கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராஜா, கலைஞர் "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சந்திப்பதற்காக டில்லி சென்றேன். கனிமொழிக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். சரத்குமார், சிறையில் பலவீனமாக காணப்பட்டார்.கனிமொழியை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைத்துள்ளனர். அவர்மீது பத்திரிகைகளில் வெளியான பொய்யான குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., நிரூபிக்க முயற்சி செய்து வருகிறது.

தி.மு.க., மற்றும் காங்கிரஸ் இடையேயான உறவு எவ்வித இடையூறுக்கும் அப்பாற்பட்டு சீராகவுள்ளது.லோக்பால் சட்டத்தின் கீழ் பிரதமரை கொண்டு வருவதை உங்களது கருத்துக்கே விட்டுவிடுகிறேன். மாநில முதல்வர்களை, லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என்பது, தி.மு.க.,வின் நிலைப்பாடு. அண்ணா ஹசாரேவின் நல்ல பணிகளை ஆதரிக்கிறோம். உள்நோக்கத்துடன் செயல்படுவதை தி.மு.க., எப்போதும் ஆதரிக்காது.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: