புதன், 1 ஜூன், 2011

உலகின் முன்னணி தீவிரவாத முறியடிப்பு நிபுணரின் உரையை சிறிலங்கா ஊடகங்கள் இருட்டடிப்பு

கொழும்பில் நடைபெறும் போர்க்கருத்தரங்கில் அமெரிக்க படைத்துறை நிபுணர் டேவிட் கில்குலேன் வெளியிட்ட கருத்துக்களை சிறிலங்கா ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளன.

நேற்று கொழும்பில் ஆரம்பமான சிறிலங்கா இராணுவத்தின் போர் அனுபவக் கருத்தரங்கில் உலகின் முன்னணி தீவிரவாத முறியடிப்பு நிபுணரும், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராயசின் சிறப்பு ஆலோசகருமான- அவுஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் லெப்.கேணலான டேவிட் கில்குலேன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

அவர் நேற்று தனது உரையில் போர்க்குற்றங்களை ஒருபோதும் மூடி மறைத்து விட முடியாது என்று கூறியுள்ளதாக ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் வாழ்க்கை நிலையை சிறிலங்கா அரசாங்கம் உயர்த்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

மீண்டும் ஒரு மோதல் நிலை உருவாவதை தவிர்க்க வேண்டுமானால், முடிவான மாற்றங்களைச் செய்வது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனினும், சிறிலங்கா ஊடகங்கள் இவரது இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தாமல் இருட்டடிப்புச் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com


கருத்துகள் இல்லை: