திங்கள், 20 ஜூன், 2011

நோர்வே, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளின் இலங்கை தூதரகங்களுக்கான செங்கன் விஸா விண்ணப்ப நிலையம் இடமாற்றம்

நோர்வே, பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் இலங்கை தூதரகங்களுக்கான செங்கன் விஸா விண்ணப்ப நிலையம் இன்று திங்கட்கிழமை முதல் கொழும்பு 01 இல் உள்ள உலக வர்த்தக மைய கட்டிட கிழக்கு கோபுரத்தின் 6ஆவது மாடியில் இயங்கவுள்ளது.
வி.எப்.எஸ். குளோபல் சேவை நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இந்நிலையம் தூதுவராலயங்களின் விஸா விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பான விடயங்களை கையாளுகின்றது.

2001ஆம் ஆண்டு முதல் 425 அலுவலகங்களினூடாக 35 நாடுகளின் தூதரகங்களுக்கு சேவையாற்றி வருகின்ற இந்நிறுவனம் 52 நாடுகளில் இயங்கின்றது.

செங்கன் விஸா விண்ணப்ப நிலையம் முன்னர் கொழும்பு 5 ஹவெலேக் வீதி இயங்கியமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: