திங்கள், 6 ஜூன், 2011

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

ஏழை, எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ. 25,000 மற்றும் தாலி செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை தெரிவித்திருந்தார் ஜெயலலிதா. தற்போது ஆட்சியில் அமர்ந்தவுடன் அந்தத் திட்டத்தை அமல்படுத்த முதல் வேலையாக உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு ரூ. 25,000 நிதியுதவி மற்றும் 4 கிராம் தங்கக் காசு ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினார் ஜெயலலிதா.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

எனக்கு ஒரு சந்தேகம். தமிழ் சாதிகளில் தாலிக்குத் தங்கம் என்பது மாப்பிள்ளை வீட்டார் பொறுப்பு. ஆனால் இத்திட்டம் முரண்பாடாக உள்ளதே.