வெள்ளி, 10 ஜூன், 2011

இலங்கையில் வாடகைக்கு விடப்படும் நானோ கார்கள்


இலங்கையில் டாடாவின் நானோ கார் புதிய அவதாரம் எடுத்துள்ளது. ஆம், இலங்கையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் நானோ கார்களை வாடகை கார்களாக பயன்படுத்த துவங்கியுள்ளது.

கடந்த மாதம் இலங்கையில் நானோ காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இலங்கை வாகன சந்தையில் நானோ காருக்கு நல்ல கிராக்கி இருக்கும் என்பதை உணர்ந்தே நானோவை அங்கு டாடா மோட்டார்ஸ் கொண்டு சென்றது.

இதற்கு ஏற்றாற்போல் நானோவுக்கு அங்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதையும் தாண்டி அங்குள்ள டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று நானோ கார்களை வாடகைக்கு விட துவங்கியுள்ளது. இது நல்ல ஐடியாவா இருக்கே என்று அங்குள்ள பல டிராவல்ஸ் நிறுவனங்களும் நானோவை வாடகை கார்களாக பயன்படுத்த முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயந்தா தர்மதாஸா கூறியதாவது:

" தற்போது 45 நானோ கார்களை எங்களது நிறுவனத்தில் டாக்சி கார்களாக பயன்படுத்துகிறோம். இந்த ஆண்டுக்குள் 200 நானோ கார்களை எங்களது டாக்சி நிறுவனத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளோம்.

மற்ற கார்களை காட்டிலும், கட்டணத்தை குறைவாக வசூலிக்க முடியும் என்பதோடு, நானோ காரின் பராமரிப்பு, எரிபொருள் சிக்கனம் ஆகியவை சிறப்பாக உள்ளது. மேலும், ஆட்டோவுக்கும் நல்ல மாற்று வாகனமாக நானோ கார் விரைவில் மாறும்," என்றார்.

நாம் நினைப்பதுபோல் இலங்கையில் நானோ கார் குறைந்த விலை காராக இருக்கவில்லை. அந்நாட்டு விதிகளின்படி, அங்கு இறக்குமதி வரி அதிகம் என்பதால், பேஸ் மாடல் நானோ கார் ரூ.3.8 லட்சத்திற்கும், ஹை-வேரியண்ட் நானோ கார் ரூ.4.5 லட்சம் விலையிலும் விற்கப்படுகிறது.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: