வெள்ளி, 17 ஜூன், 2011

அல் காய்தா புதிய தலைவர் அல்-ஜவாஹிரியையும் கொல்வோம்: யு.எஸ்.சபதம்

அல் காய்தாவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அல்-ஜவாஹிரியையும் சுட்டுக் கொல்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராணுவத் தலைமை தளபதி அட்மிரல் மைக் முல்லன், "அல் காய்தா இயக்கமும், அதன் தலைவரும் இன்னும் எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். நிச்சயமாக ஜவாஹரியையும் பின்லேடனைப் போல வீழ்த்துவோம்" என்றார்.

பின்லேடனுக்கு அடுத்து ஜவாஹிரி புதிய தலைவரானதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று முல்லன் மேலும் கூறினார்.
http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: