சனி, 18 ஜூன், 2011

வரவேற்பு பேனர்கள்: அ.தி.மு.க.,வினருக்கு ஜெ., கண்டிப்பு

வரவேற்பு வளைவுகள், பேனர்கள், டிஜிட்டல் போர்டுகள் வைக்க கூடாது என, அ.தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் போன்ற எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எவரும், அவர்களின் படத்தை போட்டு டிஜிட்டல் போர்டுகள் வைப்பதோ, வரவேற்பு வளைவுகள், வரவேற்பு பேனர்கள் வைப்பதோ கூடாது. எளிமையான ஆட்சியாக இருக்க வேண்டும். ஆடம்பரங்களுக்கு எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது. அதே நேரம் கட்சிக்கொடிகள், தோரணங்கள் கட்ட தடையில்லை. தங்கள் பகுதிக்கு முதல்வரே வருகை தந்தாலும், வரவேற்பு வளைவுகளோ, டிஜிட்டல் போர்டுகளோ யாரும் வைக்க கூடாது என, அவர் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை மாவட்ட செயலாளர்கள் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவித்து வருகின்றனர்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: