வியாழன், 23 ஜூன், 2011

அமெரிக்க தூதராக நிரூபமா ராவ் நியமனம்

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நிருபமா ராவ் நியமிக்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இந்திய அயலுறவுத்துறை செயலராக பணியாற்றி வரும் நிருபமா ராவ் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து அவரை அமெரிக்காவின் இந்திய தூதராக மத்திய அரசு நியமித்துள்ளது.

அவரது அயலுறவுத்துறை செயலர் பணி காலம் நிறைவடைந்ததும், அவர் அமெரிக்கா சென்று பொறுப்பை ஏற்றுக் கொள்வார்.

இதுபோல நேபாள நாட்டின் இந்திய தூதராக ஜெயந்த் பிரசாத்தும், பனாமா நாட்டின் இந்திய தூதராக யோகேஷ்வர் வர்மாவும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: