வெள்ளி, 3 ஜூன், 2011

இளைஞர்களின் செக்ஸ் உணர்வை பாதிக்கும் தூக்கமின்மை!

இளைஞர் ஒருவர், நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் அளவு குறைந்துவிடும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதுவும் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்போது, ஒரு வார காலத்திற்குள்ளாகவே இந்த பாதிப்பை உணரலாம் என்கிறது அந்த ஆய்வு.

ஆண்களின் பாலியல் உணர்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது ஹார்மோன்கள்தான். இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு இருந்தால்தான் பாலியல் உணர்வு தூண்டப்படும்.

அவ்வாறு பாலியல் உணர்வை தூண்டுவதற்கு ஆதாரமாக விளங்கும் ஹார்மோன் அளவை 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' என்று அழைக்கிறார்கள்.

இந்த டெஸ்டோஸ்டெரோன் அளவுக்கும்,சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' முக்கிய பங்காற்றுவதாக இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: