திங்கள், 20 ஜூன், 2011

என்னால் என்ன செய்ய முடியும் எனது பேச்சை சிறிலங்கா அரசு கேட்பதில்லை: கையைவிரிக்கிறார் மன்மோகன் சிங்கி..

நாம் சொல்வதையும் எமது கருத்துக்களையும் சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்தராஜபக்ச கேட்க மறுக்கிறார். இந்த நிலையில் என்னால் என்ன செய்ய முடியும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிடம் புலம்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக பதவியேற்ற பின்னர் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா புதடில்லி சென்றபோது இந்திய பிரதமரை சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின்போதே சிறீலங்கா விவகாரம் கலந்துரையாடலில் எடுக்கப்பட்டபோது மன் மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். போரின் போது, உளவுத் தகவல்கள், செய்மதிப்புகைப்பட தகவல்கள், ஆயுதங்கள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் படையினரின் நேரடியான உதவிகள் என்வற்றை வழங்கிய இந்திய அரசு தற்போது சிறீலங்கா தனது பேச்சை கேட்பதில்லை என புலம்புவது அதன் இராஜநத்திரத் தோல்வியையே காட்டுவதாக அவதானிகள் தோற்றுவித்துள்ளனh.

கருத்துகள் இல்லை: