புதன், 1 ஜூன், 2011

சுயாதீன விசாரணைகளை நடத்த வேண்டியது இறைமையான நாடொன்றின் பொறுப்பாகும் - மார்டின் நெசர்கீ

சுயாதீன விசாரணைகளை நடத்த வேண்டியது இறைமையான நாடொன்றின் பொறுப்பாகும் - மார்டின் நெசர்கீ

யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், நம்பகரமானதும் சுயாதீனமானதுமான விசாரணைகளை நடத்த வேண்டியது இறைமையான நாடொன்றின் தார்மீகப் பொறுப்பாகும் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்hளர்.
இலங்கை விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை பரிந்துரைகளை எவரும் பார்வையிடக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறைமையுடைய நாடொன்று சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிலைப்பாடகும் என அவர் தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகள் அல்லது இலங்கை அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டால் மட்டுமே சர்வதேச ரீதியான விசாரணைப் பொறிமுறையொன்றை அமுல்படுத்த முடியும் என பான் கீ மூன் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பகரமான தேசிய ரீதியான விசாரணைகள் அவசியமானது என ஐக்கிய நாடுகளின் பேச்ச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: