வெள்ளி, 24 ஜூன், 2011

மகனுக்கு கொலை மிரட்டல் : அவசரமாக மதுரை திரும்பினார் அழகிரி

சென்னை வந்தால் தலை இருக்காது என்று மு.க. அழகிரி மகன் துரை தயாநிதிக்கு மிரட்டல் போன்கால்கள் வருவதைப்பற்றி நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது.


இதைப்படித்த திமுகவினர் டெல்லியில் இருந்த மு.க.அழகிரிக்கு தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்து வந்தனர்.


இதனால் பதட்டம் அதிகமாகி, அவசர அவசரமாக நேற்று மாலை மதுரை திரும்பினார் அழகிரி. தேர்தல் முடிவுக்கு பிறகு டெல்லியிலேயே முகாமிட்டிருந்த அழகிரி, நேற்று திடீரென்று மதுரை வந்தது திமுகவில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.


மிரட்டல்கள் பற்றி மகனிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் அழகிரி. பழைய நண்பர்கள் வட்டாரத்தில்
இருந்துதான் இந்த மிரட்டல் போன்கால்கள் வந்துள்ளது என்று கூறியுள்ளார் துரைதயாநிதி.

இந்த மிரட்டல்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி மகனுடனும், குடும்ப உறுப்பினர்களுடன் நெடு நேரம் ஆலோசனையில் ஈடுபட்ட அழகிரி,உடனே டெல்லி திரும்பும் முடிவை தள்ளி வைத்துள்ளார்.


வரும் 3ம் தேதி வரை மதுரையில் இருந்து கட்சி பிரமுகர்கள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவிட்டு, மகன் துரை தயாநிதி விசயத்திலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து விட்டு 3ம் தேதிமாலை டெல்லி செல்லும் முடிவில் இருக்கிறார் அழகிரி.

http://www.nakkheeran.in

கருத்துகள் இல்லை: