செவ்வாய், 21 ஜூன், 2011

இலங்கை: கதிர்காமம் முருகன் கோயில் பக்தர்கள் மீது தாக்குதல்

இலங்கையில் கதிர்காமம் முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரை மேற்கொண்ட தமிழ் பக்தர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

முல்லைத் தீவு பகுதியில் இருந்து புகழ்பெற்ற கதிர்காம முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது நேற்று அதிகாலை 5 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது.

அம்பாறை பாலமுனை பகுதியை இந்தக் குழுவினர் அடைந்தபோது ஒரு மர்ம கும்பல் ஒன்று அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சில பக்தர்கள் காயமடைந்தனர்.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்கதல் நடந்தாலும் பக்தர்கள் தங்களது பாத யாத்திரையைத் தொடர்ந்தனர்.
http://thatstamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: