புதன், 22 ஜூன், 2011

தேசியத்தலைவர் பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் மகிந்தவின் பராமரிப்பில் இல்லை: பல்டி அடித்தார் அஸ்வர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேணி வருவதாக தான் நேற்று நாடாளுமன்றத்தில் தவறுதலாக கூறிவிட்டதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ்செல்வனின் மனைவி பிள்ளைகளை அரசாங்கம் பராமரித்து வருவதாகவே தான் கூறவந்ததாகவும் ஆனால் தமிழ்ச் செல்வன் என்பதற்குப் பதிலாக பிரபாகரன் என்று கூறிவிட்டதாகவும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார். இதற்காக சபையினரிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: