புதன், 8 ஜூன், 2011

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு:கண்ணீர் விட்டு அழுத ராஜாத்தி அம்மாள்

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது என டில்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் ‌மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவிற்கு அடுத்தபடியாக ரூ.214 கோடி முறைகேடு செய்ததாக திமுக எம்.பி., கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் முக்கிய குற்றவாளிகளாக 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, தனது கணவர் வேலை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதால் ‌தனது மகனை கவனித்து கொள்வதற்காக தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க கூடாது என சிபிஐ தரப்பில் பலமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இம்மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், கனிமொழிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
கண்ணீர் விட்ட ராஜாத்தி அம்மாள்: மகளின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை கேட்ட கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், கோர்ட் வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

2 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கூட்டுக் கொள்ளை அடிக்கும் போது, இப்படியும் நடக்கலாம் என யோசித்திருக்க வேண்டும்.

சிவா சின்னப்பொடி சொன்னது…

வருகைக்கு நன்றி யோகன்