செவ்வாய், 28 ஜூன், 2011

வரத்து அதிகரிப்பு: மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்சி!

கோவில்பட்டி: விளைச்சல் அதிகரிப்பால் கோவில்பட்டி பகுதியில் மல்லிகைப் பூ விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பெண்களுக்கு மகிழ்ச்சியையும் விவசாயிகளுக்கு வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிக்கு நாலாட்டின் புதூர், வில்லிசேரி, இளையரசனேத்தல், முடுக்கு மீண்டான்பட்டி, சத்திரம்பட்டி, இடைசேவல், எட்டயபுரம், சங்கரன்கோவில், கழுகுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மல்லிகைப் பூவை விற்பனைக்கு கொணடு வருகின்றனர்.

மல்லிகைப் பூ சீசன் என்பதால் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது பண்டிகை மற்றும் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் காலமாக இல்லாததால் மல்லிகை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 கிலோ மல்லிகைப் பூ ரூ.1000-ல் இருந்து ரூ.ஆயிரத்து 800 வரை விற்கப்பட்டது.

கடந்த 10 நாட்களாக வரத்து அதிகரிப்பால் மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.50 வரை விற்கப்படுகிறது. விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பூக்களை பயிரிட்டு, பாதுகாத்து, பறித்து, விற்பனைக்கு அனுப்பும் வரை படாதபாடு படும் விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு குட கூலி கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.http://thatstamil.oneindia.in/news/2011/06/28/28-jasmine-price-decrease-aid0128.html

கருத்துகள் இல்லை: