வியாழன், 2 ஜூன், 2011

ஜிமெயில் பாஸ்வேர்ட்களை சீன ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்-கூகுள்

சீனாவிலிருந்து செயல்படும் ஹேக்கர் கும்பல், ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கானோரின் பாஸ்வேர்ட்களை திருடி விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் கூறியுள்ளதாவது:

அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் பலர், சீனாவில் ஜனநாயகம் கோரி குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்கள், அமைப்பினர், ஆசிய நாடுகள் பலவற்றின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் பாஸ்வேர்ட்கள் திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம். ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் பலரின் பாஸ்வேர்ட்களும் கூட இதுபோல திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம் என்று அது கூறியுள்ளது.

கூகுளின் இணையதள செயல்பாடுகளில் சீன ஹேக்கர்கள் ஊடுறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஹேக்கர்கள் அட்டகாசத்துடன், சீன அரசின் அடக்குமுறைகளும் அதிகரித்ததால்,சீனாவில் உள்ள தனது அலுவலகத்தை மூடுவதாக அறிவித்தது கூகுள் என்பது நினைவிருக்கலாம்.

அதன் பின்னர் சீனாவில் உள்ள தனது செயல்பாடுகளை ஹாங்காங்குக்கு மாற்றி விட்டது கூகுள்.

இந்த நிலையில், ஜிமெயில் பாஸ்வேர்ட்களை திருடும் கும்பல்களின் அட்டகாசம் சீனாவில் அதிகரித்துள்ளதாக கூகுள் கூறியிருப்பதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 கருத்து:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

இந்த அநியாயத்திற்கு எப்போது முடிவுவரும்..