ஞாயிறு, 31 ஜூலை, 2011

சிறீலங்கா அரசை காப்பாற்ற முயலும் கருணாநிதி

இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த விவரம் தெரியாமல் தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சட்டப் பேரவையில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றிய காரணத்தால் தான் இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துவிட்டதாகச் சிலர் பாராட்டுகின்றனர். தொல்.திருமாவளவன் கூட ஓர் அறிக்கையில் அது உண்மையாக இருக்குமோ என்று எண்ணி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சிலரிடம் விசாரித்தபோது அப்படி எதுவும் அமெரிக்கா இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறினர்.

அமெரிக்க வெளியுறவுத் துறைக்கான குழு, போர்க் குற்றங்களை அடுத்து இலங்கை அரசுக்கு உதவிகளை ஒரு வரையறைக்குள் நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை கூட உடனடியாக அமலுக்கு வராது.

2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கும் நிதியாண்டில் இலங்கைக்கான உதவி நிறுத்தம் பற்றிய இந்தக் குழுவின் பரிந்துரை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட், காங்கிரஸ் என்ற இரண்டு அவைகளிலும் வைக்கப்பட்டு, அவற்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.

இந்த ஆலோசனை கடந்த பல வாரங்களாக இக்குழுவின் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தியச் சுற்றுப் பயணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மற்ற நாடுகள் குறித்த விவகாரங்களை இந்திய அரசிடம் மட்டும்தான் விவாதிப்பாரே தவிர, இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசிடமும் விவாதிக்க மாட்டார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்று தெரியாமல் அதிமுகவின் தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி வருகின்றனர்.

இப்படித்தான் கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஐ.நா.சபை அவருக்கு கௌரவ விருது வழங்கப் போகிறது என்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் ஐ.நா.சபையின் அங்கீகாரம் பெற்ற அரசு சாரா அமைப்புகள் 2 ஆயிரத்து 531 ஆகும். இந்த அமைப்புகள் எதுவும் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கவில்லை என்று பின்னர் தெரிய வந்தது.

அதற்குள் ஐ.நா.சபையின் ‘தங்கத் தாரகை விருது' என்றெல்லாம் விளம்பரப் படுத்தினார்கள். அதைப்போலவே இப்போதும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துவிட்டது என்று செய்தி பரப்புகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 30 ஜூலை, 2011

முக ஸ்டாலினை விடுவித்தது போலீஸ்!

 திமுகவினரின் பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலினை விடுவிக்க போலீசாருக்கு உத்தரவிட்டது தமிழக அரசு.

இன்று காலை கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் மதியம் 2 மணி வாக்கில் விடுவிக்கப்பட்டார். ஸ்டாலினுடன் வந்த பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுக தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக தனது கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "ஆகஸ்ட் 1-ம் தேதி திமுக நடத்தவிருக்கும் பெரும் அறப்போரை நசுக்கவே என்னைக் கைது செய்துள்ளது அதிமுக அரசு," என்று கூறியிருந்தார்.

அவரது கைதைக் கண்டித்து திமுகவினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று பிற்பகல் அவரை போலீஸார் விடுவித்துவிட்டனர்.

ஸ்டாலின் நாடகம்- போலீஸ்

ஸ்டாலின் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாரூர் மாவட்ட எஸ்பி, "ஸ்டாலினை நாங்கள் கைது செய்யவில்லை. மாணவர் ஒருவர் விபத்தில் இறப்பதற்குக் காரணமான சம்பவம் தொடர்பாக மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணனிடம் விசாரணை நடத்த வந்தோம்; அவரை ஒப்படையுங்கள் என்றோம்.

அதற்கு ஸ்டாலின் தரப்பு மறுத்ததுடன் தானாகவே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைதாகினர். அவர்களை பாதுகாப்பாக திருவாரூர் அழைத்து வந்தோம். தற்போது, கலைவாணனை மட்டும் விசாரணைக்கு நிறுத்தி வைத்து, மற்றவர்களை விடுவித்துவிட்டோம்," என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து, கலைவாணனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

http://thatstamil.oneindia.in/news

ஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர்ப்பாட்டம்... ஆயிரக்கணக்கானோர் கைது!

சென்னை: ஸ்டாலின் கைதான சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசின் தேவையற்ற இந்த செயலைக் கண்டித்தும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டாலின் கைது செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களான திருச்சி, தஞ்சை மற்றும் நாகையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான எவ வேலு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் நடந்து வருகிறது.

இன்று அதிகாலை திடீரென்று வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதால் சேலம் மாவட்டத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமக்கல், திருச்செங்கோட்டிலும் சாலை மறியல் நடந்து வருகிறது.

சென்னையில்...

தலைநகர் சென்னையின் பிரதான பகுதியான அண்ணா சாலை மற்றும் வட சென்னைப் பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் நடந்தன. போராட்டத்துக்கு மாநகராட்சி மேயர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://thatstamil.oneindia.in

திருவாரூர் அருகே ஸ்டாலினை கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றது காவல்துறை

காவ‌ல்துறையை க‌ண்டி‌த்து சாலை ம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட்ட ‌மு‌ன்னா‌ள் துணை முதலமை‌ச்சரு‌ம், ‌தி.மு.க. பொருளாளருமான மு.க.‌ஸ்டா‌லி‌‌ன் உ‌ள்பட 300 பே‌ர் கைது செ‌‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

திரு‌த்துறை‌ப்பூ‌ண்டி அருகே இ‌ன்று காலை செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்த மு.க.‌‌ஸ்டா‌லி‌ன் கா‌ர் உ‌ள்பட அவ‌ரு‌க்கு ‌பி‌ன்னா‌‌ல் வ‌ந்த வாகன‌த்தை காவ‌ல்துறை‌யின‌ர் ம‌றி‌த்தன‌ர்.

அ‌ப்போது, ‌திருவாரூ‌ர் ‌தி.மு.க. மாவ‌ட்ட செயல‌ர் கலைவாணனை ஒ‌ப்படை‌க்கு‌ம்படி காவ‌ல்துறை‌‌யின‌ர் மு.க.‌‌ஸ்டா‌லி‌ட‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர். ஆனா‌ல், எ‌ன்ன வழ‌க்கு எ‌ன்று கூறாம‌‌ல் கலைவாணனை ஒ‌ப்படை‌க்க முடியாது ‌எ‌ன்று மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

காரண‌த்தை கூற காவ‌‌ல்துறை‌யின‌ர் மறு‌த்த‌தையடு‌த்து மு.க.‌ஸ்டா‌லி‌ன் சாலை ம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட்டா‌ர். இதையடு‌த்து ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட மு.க.‌ஸ்டா‌லி‌ன், மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர்‌க‌ள் அழகு ‌திருநாவு‌க்கரசு, ‌ம‌திவா‌‌ணன், விஜய‌ன் எ‌ம்.‌பி. உ‌ள்பட 300 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட அனைவரையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌திருவாரூ‌ர் கொ‌ண்டு செ‌ன்றன‌ர்.

மு.க., ஸ்டாலின் திடீர் கைது

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் கலைவாணன் என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்ததை கண்டித்த ஆர்பாட்டம் செய்ய முற்பட்ட மு.க் ஸ்டாலினையும் காவல்துறையினர் அதிரடியாககைது செய்துள்ளனர். கலைவாணன் என்ன குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார் என்ற விபரம் தெரியவில்லை.மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
http://www.dinamalar.com

பொய் வழக்கு போட்டு திமுகவினரை துன்புறுத்தி இன்பம் காணும் ஜெ - கருணாநிதி

சென்னை: கற்பனையான காரணங்களைக் கூறி பொய் வழக்கு போட்டு திமுக தலைவர்களை துன்புறுத்தி இன்பம் காணுகிறார் ஜெயலலிதா என திமுக தலைவர் மு கருணாநிதி கூறியுள்ளார்.

இந்த பழி வாங்கும் நடவடிக்கை என்பது இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதம் போன்றது, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா எப்போது ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக தனக்கு பிடிக்காதவர்கள் மீது காவல் துறையை ஏவிவிட்டு பொய் வழக்கு புனைந்து நடவடிக்கை எடுக்கத் தவறமாட்டார்.

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் தவறு என்று கூறினார்களே! என்ன ஆயிற்று அந்த வழக்கு? நிரூபித்தார்களா? நிரூபிக்க முடிந்ததா? பொய் வழக்கு தானே அது? என் மீது குற்றப்பத்திரிகையையாவது தாக்கல் செய்ய முடிந்ததா? எந்த சான்றுகளை வைத்து என்னைக் கைது செய்தார்கள்? அவ்வாறு பொய் வழக்கு போட்டதற்காக அவர்கள் மீது என்ன வழக்கு போடுவது? என்னைக் கைது செய்து அந்த அளவிற்கு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அவர்களை என்ன செய்வது?

டான்சி ஊழல் 

இதே மேம்பாலங்களைக் காட்டி சென்னை மாநகர மேயராக இருந்து சிறப்பாக பல காரியங்களைச் செய்த மு.க.ஸ்டாலின் மீதும் அதே போன்று பொய் வழக்கு சுமத்தி ஜெயலலிதா ஆட்சியிலே கைது செய்யவில்லையா? நான் கைது செய்யப்பட்ட அன்றே மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் தாக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார்கள்.

மதுரை மாநகரில் மறியலில் ஈடுபட்ட பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், என் மகன் மு.க.அழகிரி போன்றவர்களும் அங்கே கைது செய்யப்பட்டு மதுரை சிறையிலே அடைக்கப்பட்டார்கள். இவை அனைத்தும் சட்டப்படியான நடவடிக்கைகள் தானா? பழிவாங்கும் போக்கின் பிரதிபலிப்புகள் அல்லவா?

1995-ம் ஆண்டு டான்சி ஊழல் தொடர்பான வழக்கில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர அன்றைய கவர்னர் சென்னா ரெட்டி அனுமதியளித்தார் என்பதற்காக; கவர்னருக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் ஜெயலலிதா வழக்கு தொடுத்ததோடு, கவர்னர் சென்னா ரெட்டியை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று மத்திய அரசைக் கோரி பேரவையிலேயே தீர்மானம் நிறைவேற்றினாரே. இது கடைந்தெடுத்த பொய் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவில்லையா?

வைகோ கைது

தி.மு.க. ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரவோடு இரவாக வீட்டிற்கு அனுப்பினார். பொடா சட்டத்தின் பெயரால் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு மாதக்கணக்கிலே சிறையிலே அடைக்கப்பட்டார்.

தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளபோதும், நில அபகரிப்பு என்ற கற்பனையான காரணத்தைக் காட்டி அதிலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்ற நில அபகரிப்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிலே கூட இந்த ஐந்தாண்டுகளில் அவருடைய கட்சிக்காரர்கள் செய்த தவறுகளின் மீது நடவடிக்கை எடுக்காமல்; எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கி குற்றம் சுமத்திடும் செயலைத் தொடங்கியிருக்கிறார்.

தி.மு.க.வை பழிவாங்க...

எந்த அளவிற்கு தவறான தகவலின் பேரிலும் உண்மை தெரியாத நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது என்பதற்கும், கொடைக்கானல் நகரமன்றத் தலைவரை கைது செய்கின்ற அளவிற்கு எந்த அளவிற்கு பழிவாங்கும் தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு உதாரணம் ஆகும்.

இந்த வகையிலே தான் இந்த ஆட்சியிலே தி.மு.க.வினர் மீது குறிப்பாக அமைச்சர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை தளபதி மற்றும் கழக முன்னணியினர் மீது பொய் வழக்குகளை போட்டு விசாரணை என்ற பெயரால் இழுத்தடிக்கிறார்கள். அதிலும் வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலம் பாதிக்கப்பட்டு - மருத்துவமனையிலே நீண்ட நாட்கள் அனுமதிக்கப்பட்டு, தற்போது தான் சற்றுத் தேறி வருகிறார்.

அவரையெல்லாம் மூன்று நாட்கள் விசாரணை என்ற பெயரால் வைத்து அதிலே இந்த ஆட்சியினர் இன்பம் காண முயலுகிறார்கள்.

ஜெயலலிதா, கழகத்தைப் பழிவாங்கத் தவறான ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். அது இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதமாகும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.பின் குறிப்பு
தங்களது ஆட்சியில் பீடி இலை கடத்தினவனையும் சாரி கடத்தினவனையும் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கடத்தியதாக பிடித்து பொய் வழக்குப் போட்டு இம்சித்ததையும் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல விடுதலைப்புலிகள் தான் அவர்களை கொல்கிறார்கள் என்று காவல்துறை அதிகாரிகளை கொண்டு சொல்ல வைத்ததையும் தமிழத்திலுள்ள ஈழத்து அகதிமுகாங்களில் உள்ள அப்பாவிகளை விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்று காவல்துறையினரை வைத்து இம்சைப்படத்தியதையும் கூட நினைவு படுத்தியிருக்கலாம் கலைஞரே

மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போலீசாருடன் தி.மு.க.,வினர் மோதல்


சேலம்: சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், இன்று 3 வது நாளாக கையெழுத்து போட வந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைப் போலீசார் மீண்டும் கைது செய்தனர். சுபம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியது தொடர்பான வழக்கில் இவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. போலீஸ் நிலையம் முன் கூடியிருந்த தி.மு.க.,வினர் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். போலீசாருடன் தி.மு.க.,வினர் மோதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், உடனடியாக நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சேலம், அங்கம்மாள் காலனி நிலம் மற்றும் பிரீமியர் மில் நில அபகரிப்பு வழக்கில், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம், ஐகோர்ட் உத்தரவுப்படி, மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், 3 நாள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, "மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில், தினமும் காலை 8 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், எத்தனை நாள் ஆஜராகி, கையெழுத்துப் போட வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

அதன்படி, முதல் நாளான 28ம் தேதி காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டிய வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடம் காலதாமதமாக, காலை 8.10 மணிக்கு ஆஜரானார். இந்த காலதாமத்துக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரும்படி போலீசார் வலியுறுத்தினர். அதனால், வீரபாண்டி ஆறுமுகம் டென்ஷனானார். 2வது நாளான நேற்று, வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடத்துக்கு முன்னதாகவே, காலை 7.50 மணிக்கு, காரில் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினார். 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டேஷனுக்குள், 7.51 மணிக்கு நுழைந்த வீரபாண்டி ஆறுமுகம், 9 நிமிடம் நாற்காலியில் அமர்ந்தபடி காத்திருந்தார். சரியாக 8 மணி ஆனதும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு, 8.01 மணிக்கு வெளியே வந்தார். திரண்டிருந்த தி.மு.க.,வினர், வீரபாண்டி ஆறுமுகத்தை வாழ்த்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது, சிரித்த முகத்தோடு போலீசார், 8.05 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை வழியனுப்பி வைத்தனர்.

3வது நாளாக அவர் கையெழுத்திட வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். இந்நேரத்தில் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கைது : சென்னை திரு‌வல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திடீரென கைது‌ செய்யப்பட்டார். கைதான அன்பழகன் தென்சென்னை மாவட்ட தி.மு.க.செயலாளர் ஆவார். இவர் தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் இரு்ந்த போது போலீசார் வரை அதிகாலையில் கைது செய்தனர். நிலவிவகாரம் தொடர்பாக உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மில் அதிபர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக அவர் திருப்பூர் அழைத்து செல்லப்படுகிறார்.

வெள்ளி, 29 ஜூலை, 2011

திமுகவின் அழைப்பை புறக்கணித்த மாணவர்கள்:பிசுபிசுத்தது ஸ்டிரைக் - நடந்தன வகுப்புகள் வழக்கம்போல

சென்னை: திமுக அழைப்பு விடுத்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று பிசுபிசுத்தது. பெரிய அளவில் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் முன்பு போராட்டம் நடத்திய திமுகவினர் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி இன்று வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. 'மாணவச் செல்வங்கள்' வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்தார்.

இந்த போராட்டத்தில் தாங்களும் இணைவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி இன்று காலை மாநிலம் முழுவதும் திமுகவினர் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் குழுமி போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தை முறியடிக்கும், திமுகவினர் மாணவர்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி போராட்டத்தில் கலந்து கொள்ள வைப்பதைத் தடுக்கும் வகையிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதுரையில் சொதப்பலான திமுக ஆர்ப்பாட்டம்:

மதுரையில் முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் தபால் நிலையம் அருகில் திரண்டு சமச்சீர் கல்விக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். 15 நிமிடங்களிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்.

இந்தப போராட்டத்தில் மதுரை மேயர், துணைமேயர், திமுக மாவட்ட செயலாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லையில் பூங்கோதை கைது

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நெல்லை டவுன், செங்கோட்டை, சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாளையங்கோட்டை போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கலந்து கொண்டார். பள்ளியை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற அவர் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கூட்டம் அதிகம் இல்லாததால் பூங்கோதை உள்ளிட்டோர் சாவகாசமாக நடந்து போலீஸார் ஏற்பாடு செய்திருந்த பஸ்சில் ஏறிச் சென்றனர்.

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின:

இந்தப் போராட்டத்தால் பள்ளிகளில் வகுப்புகள் எந்த அளவிலும் பாதிக்கப்படவில்லை.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. மாணவர்களும், ஆசிரியர்களும் வழக்கம்போல் பள்ளிக்கு வருகை தந்தனர்.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் திமுகவினர் சிலர் பள்ளிகளின் முன்பாக நின்று பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளை தடுத்து ரகளை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக போலீஸார் தடுத்து அப்புறப்படுத்தினர்.

போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி பஸ்கள் ஓடின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. பள்ளி வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. பள்ளிகளுக்கு முன்பாக போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

பள்ளிகளின் முன்பாக சமச்சீர் கல்வியினை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திமுகவினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் வெளியே விடப்பட்டனர்.

முன்னதாக இப்போராட்டம் சமச்சீர்க் கல்வி திட்டம் தொடர்பான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது என்று தமிழக அரசு கண்டித்திருந்தது. மேலும், இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பித்த உத்தரவில்,

தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். காலை 11 மணிக்குள் வருகைப் பதிவு நிலவரம் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தத் தகவல்களைச் சென்னைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதுகுறித்து எல்லா பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் வெளியில் இருந்தால் பள்ளிக்கூட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டால் தக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடையில் வெளியில் அனுமதிக்கக் கூடாது. மதிய உணவை காரணம் காட்டி மாணவர்கள் வெளியேற அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை அரசு உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

திமுகவைக் கண்டித்து நாளை மெட்ரிக் பள்ளிகள் போராட்டம்:

இதற்கிடையே திமுகவின் போராட்ட அறிவிப்புக்கு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் கிறிஸ்துராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டம் தேவையற்றது, இதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அனைத்துப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழக நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் சார்பில் திமுகவின் போராட்டத்தைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in

கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?

கலைஞர் டிவி சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டவிதியின் கீழ் கொண்டுவர அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன," என்றார்.

கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலிட்டியின் சினியுக் நிறுவனத்திலிருந்து ரூ 214 கோடி கடனாகப் பெற்ற விவகாரத்தில்தான் இப்போது கனிமொழியும் சரத்குமாரும் திகாரில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in

அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்!

நியூயார்க்: அமெரிக்க அரசை விட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளதாம்.

உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன.

உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில். இரண்டாவது இடத்தில் ஆப்பிள் உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில் ஆப்பிள் ஐபோனை அறிமுகப்படுத்தியதில் இருந்தே அதற்கு ஏறுமுகம் தான்.

அடுத்த 3 ஆண்டுகளில் ஆப்பிள் கிடுகிடுவென்று வளர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு ஐபேடை அறிமுகப்படுத்தியது. அது கோடிக்கணக்கில் விற்று ஏகப்பட்ட லாபம். ஐபோன் மற்றும் ஐபேட் தான் தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 400 டாலரைத் தொட்டுள்ளது.

ஆப்பிளுக்கு அடுத்தபடியான பணக்கார நிறுவனம் பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட். அந்த நிறுவனத்திடம் 40 பில்லியன் டாலர் உள்ளது.

http://thatstamil.oneindia.in/

அப்பிளிடம் அமெரிக்க அரசை விட அதிகப் பணம்

அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் உள்ள ரொக்க இருப்பு, அமெரிக்க அரசின் ரொக்க இருப்பை விட அதிகம் உள்ளதென செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் நிறுவனத்திடம் 75.87 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) டாலர் ரொக்க இருப்பு உள்ளது. ஆனால் அமெரிக்க அரசின் கருவூலத்தில் 73.76 பில்லியன் டாலர் மட்டுமே ரொக்க இருப்பு உள்ளது. 

அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று குடியரசு, ஜனநாயக கட்சிகள் கோரிவருவதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் கருவூலம் அளித்த பதிலில் இருந்து இந்த விவரம் பெறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசிடம் உள்ள ரொக்க இருப்பு இந்த அளவிற்குத்தான் என்பதால் கடன் உச்ச வரம்பை உயர்த்த முடியாது என்று பதிலளித்துள்ளது.

அமெரிக்க அரசிற்கு தற்போது 14.3 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = 1000 பில்லியன்) டாலர் உள்ளது. இதற்கு மேலும் கடன் வாங்கினால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதித்துவிடும் என்று அமெரிக்க கருவூலம் கூறியுள்ளது.

சந்தை மூலதனமாக 363.25 பில்லியன் கொண்டுள்ள ஆப்பிள், அமெரிக்காவின் மிகப் பெரும் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. 3ஜி அலைபேசி வர்த்தகத்தில் அடியெடுத்து வைத்த பிறகு அதன் வளர்ச்சி அபரிதமான அளவிற்குச் சென்றுள்ளது.

http://tamil.webdunia.comமு.க.அழகிரியின் என்ஜீனியரிங் கல்லூரிக்கு அனுமதி மறுப்பு

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது தயா அறக்கட்டளை சார்பில் மதுரை சிவரக்கோட்டையில் பொறியியல் கல்லூரியை கட்டியுள்ளார்.

இந்தக் கல்லூரிக்கு மத்திய தொழில்நுட்பக் குழு அனுமதி கொடுத்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி கொடுக்காமக் தாமத்தப்படுத்தி வருகிறது. கல்லூரியில் போதிய சாலை வசதி இல்லை என்று கூறிவிட்ட அண்ணா பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கைக்கான அனுமதியையும் மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் அழகிரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசு அனுமதி கொடுத்தும், மாநில அரசு மாணவர் சேர்க்கையை நடத்தவிடாமல் தடுத்துள்ளது. எங்கள் கல்லூரிக்கு போதிய சாலை வசதி உள்ளது. இதில் நீதிமன்றம தலையிட்டு அனுமதி வழங்க, அண்ணா பல்கலைக்கழகத்துகுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விளக்கம் கேட்டு தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மாநில உயர்கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.http://thatstamil.oneindia.in

ஆட்டம் போட்ட வீரபாண்டியார் ஆதரவாளர்கள்-இரவில் போய் 'அள்ளி வந்த' போலீஸார்!

 திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் 3 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரித்தபோது, சேலம் நகரில் அவருக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்ட திமுகவினரை நேற்றிரவில் போலீசார் கைது செய்தனர்.

இந் நிலையில் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கடந்த இரு நாட்களுக்கு முன் நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் நகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில், காவல்துறை விசாரணையில் இறுந்தபோது, அவருக்கு ஆதரவாக திரண்ட கூட்டத்திலிருந்த சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

அப்போது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தது காவல் துறை. அதே நேரத்தில் அந்த சம்பவங்களையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

சாலைமறியல் செய்தவர்கள், கடைகளை மூடச் சொன்னவர்கள், சாலையில் போவோர் வருவோர் மீது தாக்குதல் நடத்தியவர்கள், காவல் துறையினர், மற்றும் அதிமுக வினரை கெட்ட வார்த்தைகளில் திட்டியவர்கள், நீதிமன்ற்றத்தில் கண்ணாடிகளை உடைத்தவர்கள் என் அத்தனை திமுகவினரையும் வீடியோவில் பதிவு செய்து வைத்துக் கொண்டனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.

நேற்று முன்தினம் மாலை வீரபாண்டி ஆறுமுகம் விடுதலையாகி வீட்டுக்கு சென்ற பின்னர், அவருக்கு ஆதரவாக ஆட்டம் போட்டவர்களும் கலைந்து சென்றனர்.

இந் நிலையில் நேற்றிரவு இவர்களது வீடுகளுக்குப் போய் நின்றன போலீஸ் ஜீப்கள். தூங்கிக் கொண்டிருந்த இவர்களை தட்டி எழுப்பி, ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து வழக்கு போட்டு உள்ளே தள்ளியுள்ளனர் காவல் துறையினர்.

இதில் ராமநாதன் என்ற திமுக தொண்டர் மீது கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் வீரபாண்டியாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக மிக ஓவராக ஆட்டம் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழியில் போவோர் வருவோரை எல்லாம் இவர் தாக்கினார். இதில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு பல் உடைந்து போனது. மொத்தத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில் ஜாமீன் நிபந்தனைப்படி சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் தினமும் காலை 8 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

கையெழுத்திட்ட பின் நிருபர்களிடம் பேசிய அவர், என் மீது போடப்பட்டுள்ள இரு வழக்குகளும் பொய்யானவை. இந்த வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்படுகிறது. இதுபோன்ற அடக்குமுறையால் திமுகவை பலவீனப்படுத்த முடியாது என்றார்.http://thatstamil.oneindia.in

இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்- பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு

திமுக அழைப்பு விடுத்துள்ள வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று நடைபெறுகிறது. ஆனால் இநதப் போராட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்கம் இன்று வழக்கம் போல பள்ளிக்கூடங்கள் இயங்கும் என அறிவித்துள்ளது.

தமிழக அரசும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடக் கூடாது என எச்சரித்துள்ளது.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி இன்று வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மாணவச் செல்வங்கள் வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த போராட்டத்தில் தாங்களும் இணைவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன. ஆனால் இப்போராட்டம் சமச்சீர்க் கல்வி திட்டம் தொடர்பான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது என்று தமிழக அரசு கண்டித்துள்ளது. எனவே இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பித்துள்ள உத்தரவில்,

தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். காலை 11 மணிக்குள் வருகைப் பதிவு நிலவரம் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தத் தகவல்களைச் சென்னைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதுகுறித்து எல்லா பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் வெளியில் இருந்தால் பள்ளிக்கூட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டால் தக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடையில் வெளியில் அனுமதிக்கக் கூடாது. மதிய உணவை காரணம் காட்டி மாணவர்கள் வெளியேற அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை அரசு உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

திமுகவுக்குக் கண்டனம்

இதற்கிடையே திமுகவின் போராட்ட அறிவிப்புக்கு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் கிறிஸ்துராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டம் தேவையற்றது, இதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அனைத்துப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.http://thatstamil.oneindia.in

இங்கிலாந்து குடியேற்றசட்டத்தை எதிர்த்து இந்திய பெண் வழக்கு

லண்டன்: இங்கிலாந்து அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்ற உரிமை ‌ சட்டத்தை எதிர்த்து, இந்திய பெண் ஒருவர் லண்டன் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இங்கிலாந்தில் ஆங்கில மொழி தெரிந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என்ற புதிய சட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தால் பாதிப்புக்குள்ளான ரஷிதா சப்தி என்ற இந்திய பெண் ஒருவர் லண்டனில் உள்ள பிர்மிங்ஹாம் கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் (ரஷிதா சப்தி (54) எனது கணவனர் வாலிசப்தி (58) யும் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். தற்போது நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன், கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவிற்கும், இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷெயர்ஸ் நகருக்கும் அடிக்கடி சென்று வருகிறேன், எனது கணவர் இந்தியாவில் வசிக்கிறார். அவருக்கு கணவருக்கு ஆங்கிலம் ‌எழுத படிக்க தெரியாத காரணத்தால் அவருக்கு இங்கிலாந்தில் புதிய குடியேற்ற சட்டத்தின் படி குடியேற்ற உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தில் எங்களுக்குள்ள உரிமையினை பறிப்பதற்கு சமமாகும், மனித உரிமையை மீறி செயல் . ஆகவே இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளித்த எனது கணவரை என்னுடன் சேர்த்துவைக்க வேண்டும் என்றார். மனுதாரர் சார்பில் மன்ஜித்கில் ஆஜராகி வாதாடினார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=284778

வியாழன், 28 ஜூலை, 2011

இலங்கை இனப்படுகொலை சனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்படம்எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்

பெங்களூர்: வெறும் 25 எம்.எல்.ஏக்கள் வரை மட்டுமே தன்னை ஆதரித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்த முதல்வர் எதியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். தனது ராஜினாமாக் கடிதத்தை கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு அவர் அனுப்பி வைத்தார்.

கர்நாடக சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் எதியூரப்பா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பாஜக இன்று காலை உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய, பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடக்கிறது என்றும் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

ஆனால் இதை முதலில் எதியூரப்பா ஏற்கவில்லை. மாறாக, தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தை அவர் அதிரடியாக பெங்களூரில் கூட்டினார். ஆனால் அவருக்கு அங்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. அவர் கூட்டிய கூட்டத்துக்கு அதிகபட்சம் 25 பேர் வரை மட்டுமே வந்திருந்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியுற்ற எதியூரப்பா தனது பிடிவாதத்தை தளர்த்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து கத்காரியுடன் தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு பேசினார். கட்சி முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், கத்காரியுடன் எதியூரப்பா பேசினார். அப்போது கர்நாடகத்தில் தனது நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் மேலிட முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகவும் அவர் தெரிவித்தார் என்றார்.

இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாலையில் கத்காரிக்கு அனுப்பி வைத்தார் எதியூரப்பா.

இதன் மூலம் கர்நாடக பாஜகவில் நிலவிய பெரும் பூசல் முடிவுக்கு வந்துள்ளது. நாளை புதிய முதல்வரை பாஜக தேர்வு செய்யவுள்ளது.

எதியூரப்பாவுக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய நாளை பெங்களூரில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடக்கும். மூத்த தலைவர்களான அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில் இக் கூட்டம் நடக்கும்.

அடுத்த முதல்வர் யார்?

அடுத்த முதல்வர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தக்குமார், ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. இவர்களில் ஈஸ்வரப்பா, எதியூரப்பாவின் ஆதரவாளர் ஆவார். ஜெகதீஷ் ஷெட்டர் தீவிர எதியூரப்பா எதிர்ப்பாளர் ஆவார். இவர்கள் தவிர எதியூரப்பாவின் தீவிர ஆதரவாளரான வி.எஸ்.ஆச்சார்யாவும் போட்டிக் களத்தில் உள்ளார்.

http://thatstamil.oneindia.in

கொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்போரில் பங்கேற்ற படைஅதிகாரியின் பதறவைக்கும் வாக்குமூலம்

சிறிலங்கா அதிபரால் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டு சரணடையும் தமிழ்ப் போராளித் தலைவர்களின் கதையை முடித்து விடுமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்குப் பணித்திருந்ததாக சனல்-4 தொலைகாட்சியிடம் சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

அதேவேளை, 58வது டிவிசனில் பணியாற்றிய மற்றொரு சிறிலங்கா இராணுவ அதிகாரி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வேலையை முடித்து விடுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.

இது படையினர் கொலைகளைச் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் இரண்டு புதிய சாட்சிகளின் செவ்விகளை நேற்று வெளியிட்டுள்ளது.

இதில் இறுதிக்கட்டத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் படைப்பிரிவில் பங்கெடுத்த பெர்னான்டோ என்ற படை அதிகாரி, சிறிலங்கா படையினரால் பெண்களும் சிறுவர்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை விபரித்துள்ளார்.

அவர் சனல்-4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அரசபடையினரால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறிய ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

“நான் வெளியில் இருந்து பார்க்கும் போது அவர்களை வெறுமனே கொடூரமான விலங்குகள் என்று தான் நினைக்கிறேன். அவர்களுடைய இதயங்களில் மனித உணர்வு இல்லை. விலங்குகள் போன்று தான் உணர்கிறேன்.

அவர்கள் பொதுமக்கள் மீது கண்டபடி சுட்டார்கள். பொதுமக்களைக் குத்தினார்கள். அவர்களின் நாக்குகளை அறுத்தார்கள். பெண்களின் மார்பகங்களை வெட்டினார்கள்.

இவற்றையெல்லாம் நான் எனது கண்களால் பார்த்தேன். சிறுவர்கள் இறந்து கிடந்ததை கண்டேன்.

பெருமளவு சிறுவர்கள் இறந்து கிடந்தார்கள். அவர்கள் அப்பாவிகள். பெருமளவு முதியவர்களும் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.

நீரேரியைக் கடந்து வந்தபோது பெண்கள், சிறுவர்கள் என்று பொதுமக்கள் மீது படையினர் சுட்டார்கள். அவர்கள் புலிப்போராளிகள் அல்ல. சாதாரண பொதுமக்கள். சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டதை எனது கண்களால் பார்த்தேன்.

தாயும் மூன்று குழந்தைகளுமாக ஒரு சிறிய குடும்பம் தப்பிச் சென்று கொண்டிருந்ததை நான் கண்டேன். அவர்களில் ஒரு சிறுவனின் காலில் சூடுபட்டு கிழே விழுந்தார்.

அந்தக் குழந்தையை நான் இந்தக் கைகளால் தூக்கினேன். தாயார் கதறி அழுதார். அந்தத் துன்பத்தின் மத்தியிலும் என்னை நன்றியுணர்வோடு பார்த்தனர்.

ஒரு நாள் ஆறு படையினர் தமிழ்ப் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்வதை எனது கண்களால் கண்டேன்.

தான் ஒரு நடைப்பிணம் போலவே இருக்கிறேன்.

ஒரு தமிழ் பெண்ணை வன்புணர்வு செய்ய வேண்டுமானால் அவளை அவர்களால் அடிக்க முடியும். அவளது பெற்றோர் அதைத் தடுக்க முனைந்தால் அவர்களை அடிக்கவோ கொல்லவோ முடியும்.

அங்கு அவர்களின் ஆட்சி தான் இருந்தது.

போர் முனையில் இருந்த படையினரின் இதயங்கள் கற்களாகிப் போயிருந்தன.

இரத்தம், கொலைகள், மரணம் என்று பார்த்துப் பார்த்து அவர்கள் மனிதஉணர்வுகளை இழந்து விட்டார்கள்.

அவர்களை என்னால் காட்டேறிகள் என்று தான் கூற முடியும்.

தலை மற்றும் பிற உடற்பாகங்கள் இல்லாத பெண்களின் உடல்களை நான் கண்டேன்.
இறந்து கிடந்த தாய் மற்றும் குழந்தையின் சடலங்களையும் பார்த்தேன், ஆனால் குழுந்தையின் தலை இருக்கவில்லை.

போரின் இறுதிக் கட்டத்தில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்களும், பெண்களும், ஆண்களும் கொல்லப்பட்டனர்.

புதுமாத்தளனில் மட்டும் 1500இற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்து கிடந்ததை நான் கண்டேன்.

அவை அனைத்தையும் அவர்களால் அடக்கம் செய்ய முடியவில்லை. அவற்றை ஒன்றாக அடுக்கி புல்டோசர் மூலம் மண் பரப்பி ஒரு அணைபோல அமைத்து அவை புதைக்கப்பட்டன.

புதுமாத்தளனில் 1500 சடலங்களை நான் கண்டேன். ஆனால் அதுபோல 50,000 இற்கும் அதிகமான மக்களுக்கு நடந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

போரின் இறுதிக்கட்டத்தில் நான் கடைசியாக நுழைந்த போது புதுமாத்தளன் பகுதி முழுவதும் சடலங்களாக நிறைந்திருந்தது.

அவற்றை அழிப்பதற்கு அவர்களுக்கு பாரிய வாகனம் ஒன்றைப் பெற்றனர். சடலங்களின் மீது மண்ணைப் போட்டு நிரப்பினார்கள்.

சில இடங்களுக்கு நீங்கள் செல்ல முடியாதளவுக்கு அழிந்து போன உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசும்.

அவர்கள் வெறும் அப்பாவி குடிமக்கள். போரிடும் தரப்பினருடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்.

அவர்களின் இறப்புக்காக தான் அழுகிறேன். இப்போது அதை வெளியே சொல்ல முடிவு செய்துள்ளேன்.

ஏனென்றால் 2009 மே மாதம் கடற்கரையின் ஒரு சிறு துண்டுப் பகுதிக்குள் நடந்த கொடூரமான குற்றங்கள் குறித்து உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் நன்றாக இருக்கிறேன்.நான் பல சடலங்களைப் பார்த்துள்ளேன். காயமடைந்தவர்கள் பலரைப் பார்த்துள்ளேன். பல வன்புணர்வுக் காட்சிகளைக் கண்டுள்ளேன்.

எனது இதயத்தை திறந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் நன்றாக இருக்கிறேன்.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.http://www.puthinappalakai.com

பெரு‌நில அபகரிப்பு ம‌ன்ன‌ர்க‌ள்

சேல‌‌ம், ‌திரு‌ச்‌சி‌யி‌ல் த‌னி சா‌ம்ரா‌ஜ்‌‌‌‌ஜிய‌ம் நட‌த்‌‌திய ‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அம‌ை‌ச்ச‌ர்க‌ள் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம், கே.எ‌ன்.நேரு த‌ற்போது காவ‌ல்துறை‌யி‌ன் பா‌ர்வை‌யி‌ல் ‌‌விழு‌ந்து‌ள்ளன‌‌ர்.

சேல‌த்‌தி‌ல் த‌னி அரசாங்க‌ம் போ‌ல் செ‌ய‌ல்ப‌ட்டவ‌ர் மு‌ன்னா‌ள் வேளா‌ண்துறை அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம். இவரை கே‌ட்டு‌த்தா‌ன் ஆ‌ட்‌சிய‌‌ர் முத‌ல் ஊரா‌‌‌ட்‌சி வரை செய‌ல்ப‌ட்டது. அ‌ந்த அளவு‌க்கு இவரது ரா‌ஜ்‌‌‌ஜிய‌ம் கொடிக‌ட்டி பற‌ந்தது. இ‌ந்த சா‌ம்ரா‌‌ஜ்‌‌ஜிய‌ம் 2011 மே 13ஆ‌ம் தே‌தியுட‌ன் ‌வீ‌ழ்‌ந்தது.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் போட்டியிட்ட வீரபாண்டி ஆறுமுகம், 34552 வாக்குகள் வித்தியாசத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி‌யிட‌ம் படுதோ‌ல்‌வி அடை‌ந்தா‌ர். வீரபாண்டி தொகுதியில் போ‌ட்டி‌யி‌ட்ட இவரது மக‌ன் ஆ.ராசே‌ந்‌திர‌ன், அ.இ.அ.தி.மு.க. வே‌ட்பாள‌ர் செல்வ‌த்‌திட‌ம் 26,378 வாக்குகள் வித்தியாசத்தில் ‌வீ‌ழ்‌ந்தா‌ர்.

இவ‌ர்களது ‌வீ‌ழ்‌ச்‌சி ம‌க்க‌‌ளி‌ன் வெ‌ற்‌றி. காரண‌ம், அராஜக‌ம் செ‌ய்து ‌நில‌த்தை அபக‌ரி‌த்த‌ல், க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து உ‌ள்‌ளி‌ட்ட இவ‌ர்க‌ளி‌ன் அனை‌த்து அராஜக செய‌ல்களு‌க்கு‌ம் முடிவு க‌ட்டினா‌ர் ம‌க்க‌ளி‌‌ன் த‌னி‌ப்பெரு‌ம்பா‌ன்மையுட‌ன் ஆ‌ட்‌சி அம‌ை‌த்த முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா. ஏழை ம‌க்க‌ளி‌ட‌ம் இரு‌ந்து ‌நில‌த்தை அப‌ரி‌த்தவ‌ர்க‌ளி‌ன் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க காவ‌ல்துறை‌க்கு உ‌த்தர‌வி‌ட்ட இவ‌ர், ‌மீ‌ட்க‌ப்ப‌ட்ட ‌அனை‌த்து நில‌த்தையு‌ம் உ‌ரியவ‌ரிட‌ம் ஒ‌ப்படை‌த்தா‌ர்.

சேலம் அங்கம்மாள் காலனி, பிரிமியர் ரோலர் மில் நிலங்கள் அபகரிப்பு வழக்கு தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம் ‌மீது சேலம் குற்றப்பிரிவு காவ‌ல்துறை வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ததுதா‌ன் தாமத‌ம் தலைமறைவா‌கி‌வி‌ட்டா‌ர். ‌திடீரென செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மு‌ன்‌பிணை கே‌ட்டு மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.

ஆனா‌ல் மு‌ன்‌பிணை கொடு‌க்க மறு‌த்த ‌வி‌ட்ட செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், கா‌வ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் சரணடையுமாறு உ‌த்தர‌வி‌ட்டது. இ‌ந்த உ‌த்தரவை தொட‌ர்‌ந்து இ‌ன்று சேல‌ம் கு‌ற்ற‌ப்‌பி‌ரிவு காவ‌ல் ‌நிலைய‌த்த‌ி‌ல் சரணடை‌ந்தா‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம். த‌ற்போது 3 நா‌‌ட்க‌ள் காவ‌ல்துறை‌யி‌‌ன் ‌விசாரணை வளைய‌த்து‌க்கு‌ள் இரு‌க்‌கிறா‌ர் ‌வீரபா‌ண்டியா‌ர்.

‌திரு‌ச்‌சி‌யி‌ல் பெரு‌நில ம‌‌ன்ன‌ர் போ‌ல் வா‌ழ்‌ந்தவ‌ர் ‌தி.மு.க. மு‌ன்னா‌ள் போ‌க்குவர‌த்து‌த்துறை அமை‌ச்‌ச‌ர் கே.எ‌ன்.நேருவு‌ம், அவரது சகோதர‌ர் கே.என். ராமஜெயம். சாலை ‌விப‌த்‌தி‌ல் மரணமடை‌ந்த அமை‌ச்ச‌‌ர் ம‌ரிய‌ம்‌பி‌ச்சை‌யிட‌‌ம் தோ‌‌ல்‌வி அடை‌ந்த கே.எ‌ன்.நேரு த‌ற்போது தலைமறைவு வா‌ழ்‌க்கை வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்.

‌திருச்சி பேரு‌ந்து நிலையம் அருகே இரு‌க்கு‌ம் ஒட்டலை கே.‌எ‌ன்.நேரு, அவருடைய தம்பி ராமஜெயம், திருச்சி மாநகராட்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் ரவுடிகளை வைத்து ‌மிர‌ட்டி ஒட்டலை பறித்துக்கொண்டதாக நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் கதிர்வேல் எ‌ன்பவ‌ர் திருச்சி மாநகர காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்துவிடம் கட‌ந்த 18ஆ‌ம் தே‌தி புகா‌ர் அ‌ளி‌த்தா‌ர்.
இ‌ந்த புகாரை தொட‌ர்‌ந்து மதுரை உ‌‌ய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை‌யி‌ல் கட‌ந்த 21ஆ‌ம் தே‌தி மு‌ன்‌பிணை கே‌ட்டு மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர் கே.எ‌ன்.நேரு. அ‌ந்த மனு இ‌ன்னு‌ம்‌ ‌விசாரணை‌க்கு வர‌‌வி‌ல்லை.

இ‌ப்படி ஊரை அடி‌த்து உலை‌யி‌ல் போ‌ட்ட கதையாக ஏழைக‌ளி‌ன் ‌நில‌த்தை அபக‌ரி‌த்த ‌தி.மு.க.‌ அமை‌ச்ச‌ர்‌க‌ள் முத‌ல் கவு‌ன்‌சில‌ர் வரை த‌ற்போது ‌தலைமறைவு வா‌ழ்‌க்கை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா‌வி‌ன் இ‌ந்த அ‌திரடியா‌ல் பொதும‌க்க‌ள் ம‌த்த‌ி‌யி‌ல் ம‌கி‌‌ழ்‌ச்‌சி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதே எ‌ன்றே சொ‌ல்லா‌ம்.

சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக சேலம் 24வது வட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சித்தானந்தம், சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கனகரா‌ஜ் கைது செய்யப்பட்ட அடு‌த்த ‌வினாடியே க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்‌கினா‌ர் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா.

இ‌ப்படி மு‌ன் உதாரணமாக இரு‌க்க வே‌ண்டிய மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, தவறு செ‌ய்தா‌ல் த‌ண்டி‌க்க‌ப்படுவ‌தி‌ல் எ‌ந்த‌வித ஆ‌ட்சேபனையு‌ம் இ‌ல்லை எ‌ன்று கூறு‌கிறா‌‌ர். இ‌ப்படி கூறு‌ம் கருணா‌நி‌தி ஆ‌ட்‌சி‌யி‌ல் இரு‌க்கு‌ம்போது இ‌ந்த அமை‌ச்ச‌ர்க‌ள் ‌மீது எ‌‌த்தனை புகா‌ர். அ‌ப்போது நடவடி‌க்கை எடு‌த்‌திரு‌ந்தா‌‌ல் இ‌ப்போது இதுபோ‌ன்று நட‌க்குமா? ‌வினை ‌விதை‌த்தவ‌ன் ‌வினை அறு‌ப்பா‌ன்- எ‌ன்ற பழமொ‌ழிதா‌ன் ‌நினைவு‌க்கு வரு‌கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலம் அபகரிப்பு புகார்கள் பெற தனிப்பிரிவு த‌மிழக அரசா‌ல் அம‌ை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌நில அப‌க‌ரி‌ப்பு புகா‌ரி‌ல் முத‌லிட‌‌த்‌தி‌ல் நாமக்கல் மாவட்ட‌ம் உ‌ள்ளது. 234 பேர் தங்கள் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்துள்ளனர்.

அடு‌த்து ஈரோடு மாவட்ட‌‌த்‌தி‌ல் 181 பேர், சேலம் மாவட்ட‌‌த்‌தி‌ல் 176 பேர், திருப்பூர் மாவட்டத்தில் 155 பேர், கடலூர் மாவட்டத்தில் 124 பேர், திருச்சி மாவட்டத்தில் 99 பேர், திருச்சி நகரில் 126, கோவையில் 62, மதுரையில் 42 பேர் தங்கள் நிலத்தை சிலர் வலுக்கட்டாயமாக அபகரித்துக்கொண்ட ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளனர்.

நில ஆக்கிரமிப்பாளர்களில் 90 சதவீதம் பேர் அரசியல்வாதிகள் என்று காவ‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌திய ‌விசாரணை‌யி‌ல் அ‌ந்த அ‌தி‌ர்‌‌ச்‌சி தகவ‌ல் தெரியவந்துள்ளது. கடந்த ஒ‌ன்றரை மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட நிலம் அபகரிப்பு புகார்கள் கூறப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் மட்டும் நில அபகரிப்பு புகார்கள் குறைவாக உள்ளதா‌ல் ‌மீத‌முள்ள 25 மாவட்டங்களில் சிறப்பு ‌நீ‌திம‌ன்ற‌ங்களை த‌மிழக அரசு அமை‌க்க உ‌ள்ளதாக செ‌ய்‌திக‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளது. இதற்கான பரிந்துரையை சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு தம‌ிழக அரசு அனுப்பி உள்ளது. ஓரா‌ண்டு செ‌ய‌ல்பட உ‌ள்ள இந்த சிறப்பு ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளை அமை‌க்க அரசு 6.5 கோடி ரூபா‌ய் ஒது‌க்‌கீடு செ‌ய்து‌ள்ளதா‌ம். கு‌ற்ற‌ம் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டா‌ல் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்க ‌இ‌ந்த சிறப்பு ‌‌‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு அதிகாரம் உள்ளதா‌ம்.
இது தமிழ் வெப்துனியாவின் செய்திக் கட்டுரை
நன்றி http://tamil.webdunia.com

மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்குதல்- 30 பேர் காயம்

ராமேஸ்வரம்: தமிழக மீ்னவர்கள் மீது இலங்கை கடற்படை காடையர்கள் மீண்டும் வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். நடுக் கடலில் நடந்த இந்த அட்டூழியச் செயலால் தமிழக மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.

ராமேஸ்வரம், வேதாரன்யம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென இலங்கைப் படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை முற்றுகையிட்ட அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களைத் தாக்கினர். அவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவிகள், மீன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டனர்.

இன்று அதிகாலை நடந்த இந்த தாக்குதலில் 30 மீனவர்கள் காயமடைந்தனர். பின்னர் அனைவரையும் மிரட்டிய கடற்படை அங்கிருந்து போகுமாறு விரட்டியது. இதையடுத்து தமிழக மீனவர்கள் கரை திரும்பினர். இதுதொடர்பாக ராமேஸ்வரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
http://thatstamil.oneindia.in/news

வீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- என்ன பேச்சு?

சேலம்: மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக செயலாளருமான முக அழகிரி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை அவரது இல்லத்தில் சந்தி்த்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் திமுக வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு புகாரில் சிக்கி தலைமறைவாகி பின்பு சரண் அடைந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர் முக அழகிரி இன்று சேலம் சென்று வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு அவர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க அவரது தரப்பு துடித்துக் கொண்டிருக்கிறது. அதை கடுமையாக எதிர்த்து வருகிறது அழகிரி தரப்பு. இவர்களுக்கு இடையே சிக்கி கருணாநிதி திண்டாடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் திமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டியாரை அழகிரி சந்தித்துப் பேசியது பல்வேறு எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.
http://thatstamil.oneindia.in

அதிமுக எம்.பிக்களுடன் ஜெ. திடீர் ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 1ம் தேதி துவங்கவிருக்கும் நிலையில் அதிமுக எம்.பி.க்களுடன் முதல்வர் ஜெயலலிதா திடீர் ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தனது கட்சி எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்தது. இதில் மக்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, செம்மலை, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆனந்தன், பி. குமார், ஓ.எஸ். மணியன், சி. சிவசாமி, கே. சுகுமார், பி. வேணுகோபால், மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், பாலகங்கா, ரபி பெர்னார்ட், இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குளிர்கால கூட்டத் தொடரில் 2ஜி ஊழல் விவகாரத்தில் திமுகவுக்கு மேலும் நெருக்கடி கொடுப்பது பற்றியும், நாடாளுமன்றத்தில் செயல்பட வேண்டிய விதம் பற்றியும் எம்.பிக்களுக்கு ஜெயலலிதா அறிவுரை வழங்கியுள்ளார்.

கருணாநிதியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு! அவரது ஆட்சிக்காலத்திலேயே நடந்தது

ஜாபர் சேட் வீட்டில் நடத்திய சோதனையில், பெருமளவிலான சி.டி.,க்கள் சிக்கின. இவற்றை ஆய்வு செய்ததில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் சிலரின் உரையாடல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், லஞ்ச ஒழிப்புத் துறையினர், "ஷாக்' ஆகியுள்ளனர். கடந்த, தி.மு.க., ஆட்சிக்காலத்தில், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்து கோலோச்சியவர் ஜாபர் சேட். மிக முக்கிய பதவியில் இருந்ததால், அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, பல வகைகளில் தனக்கு தேவையானதை செய்து கொண்டவர். ஆட்சி மாறியதும், இவரது காட்சியும் மாறியது. மண்டபம் அகதிகள் முகாமை கவனிக்கும் அதிகாரியாக மாற்றப்பட்டார். தொடர்ந்து, இவர் மீது புகார்கள் குவியத் துவங்கின. அதில் ஒன்று தான், சென்னை திருவான்மியூர் பகுதிகளில், வீட்டு வசதி வாரிய மனையை, உண்மைகளை மறைத்து ஒதுக்கீடு பெற்று, அவற்றை வீடுகளாக கட்டி விற்பனை செய்து, வாரியத்தை ஏமாற்றியது.
சென்னையைச் சேர்ந்த சங்கர் என்பவர், தலைமைச் செயலரிடம் கொடுத்த புகார், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆட்டம் போட்ட ஜாபர் சேட் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது. நேற்று முன்தினம், ஜாபர் சேட்டின் அண்ணாநகர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனையிட்டனர். சென்னையில் எட்டு இடங்கள், பெரிய குளத்தில் ஒன்று என, ஒன்பது இடங்களில் ரெய்டு நடந்தது. இதில், ஜாபர் சேட்டின் அண்ணாநகர் வீடு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் டிபன்ஸ் காலனி வீடு, பெரிய குளத்தில் உள்ள ஜாபரின் மாமனார் சலீமின் வீடு ஆகியவை முக்கியமானவை. மற்ற வீடுகளில் ஒன்றும் சிக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஜாபரின் அண்ணாநகர் வீட்டில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் சுப்பையா, ஜெயலட்சுமி தலைமையில் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஐந்து மணி நேரத்திற்கும் மேல் சோதனையிட்டனர். இதில், இரண்டு லேப்-டாப்கள், எட்டு, "ஐ-பாட்'கள் மற்றும் 35 சி.டி.,க்கள் மற்றும் மனை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிற்பகல் 2 மணிக்குள் அனைத்து இடங்களிலும் சோதனையை முடித்துக் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், இரவு 9 மணிக்கு, திருவான்மியூரில் உள்ள ஜாபரின் வீடு, கே.கே.நகர் ராமசாமி சாலையில் உள்ள ராஜமாணிக்கத்தின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். இரண்டு வீடுகளும் காலியாக இருந்தாலும், அவற்றை உரியவர்கள் முன்னிலையில் திறந்து, இரவு 12 மணி வரை சோதனையிட்டுள்ளனர். ஆனால், அதில் ஒன்றும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், ஜாபர் சேட்டின் வீட்டில் கைப்பற்றப்பட்ட, சி.டி.,க்களில் உள்ள தகவல்கள் குறித்து, அதற்கென போலீசில் உள்ள பிரத்யேக,"லேப்'பில் ரகசியமாக ஆய்வு செய்யப்பட்டது. அதில், கடந்த ஐந்தாண்டுகளில் உளவுத்துறையில் அவர் இருந்த போது, பதிவு செய்த டெலிபோன் உரையாடல்கள் இருந்தது. அதில், குறிப்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரின் உரையாடல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த சி.டி.,க்களில் வேறு யாருடைய உரையாடல்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ஜாபருடைய, "ஐ-பாட்கள், லேப்-டாப்'களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்த போது, கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த முக்கிய சில நிகழ்வுகளுக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியுள்ளன. பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். முதற்கட்டமாக, ஜாபர் மற்றும் துர்கா சங்கரின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அவற்றின் மூலம் வழக்கு தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களை கொண்டு, அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/News

புதன், 27 ஜூலை, 2011

கேரளாவில் 7 முறை நிலநடுக்கம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியில், நேற்று நான்கு மணிநேர இடைவெளியில் 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

கேரள மாநிலத்தில் நேற்று, இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மதியம் கோட்டயம் மாவட்டத்தின், மீனாட்சில், இராட்டுபேட்டா, முண்டகேயம், பாலா, கஞ்சிரம்பள்ளி ஆகிய பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் முண்டகேயம் பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

பத்தினம்திட்டா மாவட்டத்தில், கோணியில், நாராயணபூரம் ஆகிய பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இடுக்கியின் செருதோணி, கட்டப்பனா, நெடுங்கம், தேக்கடி, புல்லுமேடு, முல்லைபெரியார், ஆணாகெட்டு, முலமற்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 1.5 முதல் 3.8 வரை பதிவானது.

பகல் 1.09 மணிக்கு துவங்கிய நிலநிடுக்கம், 1.15 மணிக்கு இரண்டாவது முறை ஏற்பட்டு 2 நிமிடங்கள் தொடர்ந்தது. பின்னர் அவ்வப்போதாக நிலநடுக்கம் ஏற்பட்டு, கடைசியாக 5.21 மணிக்கும் ஒரு முறை ஏற்பட்டது. கோணி பகுதியில் இடி இடிப்பது போன்ற ஒலியுடன், லேசான நிலநடுக்கமும் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறினார். நிலநடுக்கத்தினால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது, வீடுகள், கடைகள், பள்ளிகளில் இருந்த மக்கள் சாலைகளுக்கு ஒடி வந்தனர். இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த வாரம் வியாழனன்று அதிகாலை 5.20 மணிக்கும், வெள்ளியன்று இரவு 9.50, 9.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபகுதிகளில் நேற்றும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமைக்கப் போவதாக அறிவிப்பு

சென்னை: சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக தலைமை பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மாற்று அணி அமைப்பது என்றும் பாமக முடிவு செய்துள்ளது.

சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்கு பலத்த அடி கிடைத்தது. திமுக கூட்டணியில் முதல் ஆளாகச் சேர்ந்து 30 தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சிக்கு நாமம் போடுவது போல 3 தொகுதிகளில் மட்டுமே மக்கள் வெற்றி கொடுத்தனர்.

தங்களது தோல்விக்கு திமுகவுடன் சேர்ந்ததே காரணம், திமுக மீதான ஊழல் புகார்கள் தங்களையும் பாதித்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பகிரங்கமாகவே பேசத் தொடங்கினர்.

இந்த நிலையில் கட்சியின் மாவட்ட அளவிலான பொதுக் குழுக் கூட்டங்களை நடத்தி வந்த பாமக இன்று தலைமை பொதுக் குழுக் கூட்டத்தை சென்னையில் கூட்டியது.

டாக்டர் ராமதாஸ் தலைமையிலான இக்கூட்டத்தில் அன்புமணி, ஜி.கே.மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காலையில் தொடங்கிய கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினர்.

கட்சியின்பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் பேசுகையில், இனி திமுகவுடன் மட்டுமல்ல, அதிமுகவுடனும் கூட்டு சேரக்கூடாது. தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக புதிய அணியை உருவாக்க வேண்டும். இனி வரும் எந்த தேர்தலிலும் நாம் சீட் கேட்கின்ற நிலை ஏற்படக்கூடாது. நாம் தான் சீட் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் அரசியல் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த கட்சிகள் தமிழரின் உரிமையை விட்டுக்கொடுக்கின்றனர். தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் ஒரு புதிய வரலாற்றை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசியலில் இருந்து சினிமா முற்றிலுமாக ஒதுக்கப்பட வேண்டும். சினிமா தொடர்பே இல்லாமல் பாமக ஆட்சியமைக்க வேண்டும்.

நமது வலிமையை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுகவினரின் செயல்பாடுதான் நாம் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம். இதுபோன்ற நிலை இனி ஏற்படக்கூடாது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வருங்காலத்தில் மருத்துவர் ராமதாஸ் ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்று அவர்கள் பேசினர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியிலிருந்து விலகுவது என்ற முடிவை பொதுக்குழு எடுத்தது. மேலும், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மாற்று அணி அமைக்கப் போவதாகவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவுகளை பொதுக்குழுவில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார். அப்போது உறுப்பினர்கள் ஒருமனதாக கைகளைத் தட்டி வரவேற்றனர்.

ஜி.கே.மணி மேலும் கூறுகையில், தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ், அதிமுக, திமுக என யாருமே மக்களுக்கு நல்லது செய்யவில்லை. எனவேதான் இவர்களுடன் சேராமல் மாற்று அணியை அமைக்க பாமக முடிவு செய்துள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்லாமல் இனி வரும் தேர்தல்களிலும் மாற்று அணி அமைத்தே பாமக தேர்தல்களை சந்திக்கும். திமுகவுடன் மட்டுமல்லாது, அதிமுகவுடனும் அது கூட்டணி சேராது என்றார்.

திமுகவை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு

முன்னதாக கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ காடுவெட்டி குரு திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் கூறுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்த போதிலும், பாமகவினருக்கு எந்தவித ஒத்துழைப்பையும் திமுகவினர் தரவில்லை. மாறாக வேண்டும் என்றே நாம் தோற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டனர். சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் என்றார்.

http://thatstamil.oneindia.in

இந்த ஆண்டுக்கான எனது ஆயிரமாவது(1000) வலைப்பதிவு


இது எனது இந்த ஆண்டின் ஆயிரமாவது பதிவாகும்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வசிக்கும் ஊடகவியலாளரான நான் ஏனைய ஊடகங்களில் நான் படித்த சுவாரசியமான செய்திகளை அந்த ஊடகங்களின் மூலத்தை அதாவது இது இந்த ஊடகத்தின் செய்தி என்ற மூலத்தை குறிப்பிட்டு எனது நண்பர்கள் மற்றும் என்னை அறிந்த வாசகர்களுக்கு அது சென்றடையட்டும் என்ற எண்ணத்தில் எனது தளத்தில் இதுவரை பதிவேற்றியிருக்கிறேன்.
தொலைக்காட்சி ஒன்றின் செய்தி ஆசிரியர் சமூக அரசியல் செயற்பாட்டாளர் என்று பலவேறு தளங்களில் பணி புரிவதால் ஏற்பட்டுள்ள வேலைப் பழு காரணமாக என்னால் இந்த வருடம் சுயமான பதிவுகளை எழுத கால அவகாசம் கிடைக்கவில்லை. நினைவழியா வடுக்கள்(மணற்கேணி மாத இதழில் தொடராக வெளிவருகிறது) இரண்டாம் முள்ளிவாயக்கால் ஆகிய நூல்களை நான் தற்போது எழுதிக் கொண்டிருப்பதும் கால அவகாசம் போதாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமாகும்.
எனது 35 வருட ஊடக அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டப்பணயத்தில் உண்மையின் பின்னால் ஒழிந்திருக்கும் பொய்களையும்,பொய்களின் பின்னால் ஒழிந்திருக்கும் உண்மைகளையும் நான் கட்டுடைத்து வெளிக் கொணர்ந்திருக்கிறேன்.
காந்தி தேசத்தின் மறுபக்கம், தமிழ் தளத்தில் ஊடகவியல், சாதியமும் தமிழ் தேசியமும்,மாறகின்ற தளங்களும் மாறா மனோபாவங்களும் என்பன நான் என்னுடைய ஊடக மற்றும் விடுதலைப் போராட்ட பயணத்தில் எழுதியவற்றில் எனக்கு மனத் திருப்தி தந்தவையாகும்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீவிர ஆதரவாளனான நான் உலக தமிழ் சிந்தனை மையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் உலகத் தமிழர்களுடைய பல்துறை சாhந்த சக்தி வழங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் உலகத் தமிழ் மக்களுக்கு பொதுவான தமிழ் ஊடகக் கருத்தில் ஒன்று உருவாக்ப்பட்டு லக ஊடகப்பரப்பில் மேற்குலக ஆதிக்க ஊடகங்களுக்கு இணையாக முற்போக்கான தமிழ் ஊடகத் தளம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். இன்றுவரை என்னால் முடிந்தவரை இதை நோக்கி செயற்படுகிறேன்.
அன்புடன்
சிவா சின்னப்பொடி

நீ‌திம‌ன்ற நேர‌த்தை ‌விரய‌ம் செ‌ய்து‌வி‌ட்டது த‌மிழக அரசு - சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி வழ‌க்‌கி‌ல் அர‌சு வழ‌க்க‌றிஞ‌ர் வாத‌த்தா‌ல் பரபர‌ப்பு

கல்‌வி, ச‌ட்ட‌த்துறை‌யி‌ல் த‌மிழக அரசு‌க்கு உரிய ஆலோசனைகளை வழ‌ங்க தகு‌தியான நப‌ர்க‌ள் இ‌ல்லை எ‌ன்று‌ம் ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌திரு‌த்த‌ம் செ‌ய்து ‌நீ‌திம‌ன்ற நேர‌த்தை ‌‌விரய‌‌ம் செ‌ய்து‌வி‌ட்டதாகவு‌ம் சம‌ச்‌சீ‌‌ர் க‌ல்‌வி வழ‌க்‌கி‌ல் அரசு வழ‌க்க‌றிஞ‌ர் வா‌தி‌ட்டது பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

நட‌ப்பா‌ண்டிலேயே சம‌ச்‌சீ‌‌ர் க‌ல்‌வியை அம‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்ற செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌‌ர்‌த்து த‌மிழக அரசு உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செ‌ய்து‌ள்ளது.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் இ‌ன்று 2வது நாளாக த‌‌மிழக அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ‌பி.‌வி.ரா‌வ் வா‌‌தி‌ட்டா‌ர். அ‌ப்போது குறு‌க்க‌ி‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், த‌மிழக அரசு எ‌ந்த நோ‌க்க‌த்‌தி‌ற்காக சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி ‌‌தி‌ட்ட‌த்‌‌தி‌ல் ச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌ம் கொண‌்டு வ‌ந்தது எ‌ன்று கே‌ட்டன‌ர்.

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌யை அம‌ல்படு‌த்த‌ வே‌ண்டு‌ம் எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌த்த ‌பிறகு‌ம் ச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌ம் ஏ‌ன் எ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ள் கே‌ள்‌வி எழு‌ப்‌பின‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த த‌மிழக அ‌ர‌சி‌ன் வழ‌க்க‌றிஞ‌ர் ‌பி.‌பி.ரா‌வ், க‌ல்‌வி, ச‌ட்ட‌த்துறை‌யி‌ல் த‌மிழக அரசு‌க்கு உரிய ஆலோசனைகளை வழ‌ங்க தகு‌தியான நப‌ர்க‌ள் இ‌ல்லை எ‌ன்றா‌ர்.

அ‌வ்வாறு ஆலோசனைக‌ள் வழ‌ங்காததா‌‌ல் த‌மிழக அரசு ச‌ட்ட‌த்‌‌திரு‌த்த‌ம் கொ‌ண்டு வ‌ந்து‌ள்ளது எ‌ன்று‌ம் ரா‌வ் வா‌‌தி‌ட்டா‌ர்.

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி ‌பிரபா ஸ்ரீதேவ‌ன் ஏ‌ற்கனவே வழ‌ங்‌கிய ‌தீ‌ர்‌ப்ப‌ி‌‌ல் சம‌ச்‌சீ‌‌ர் க‌ல்‌வி‌த் ‌தி‌ட்ட‌த்தை 2011ஆ‌ம் ஆ‌ண்டோ அத‌ற்கு ‌பிறகோ அம‌ல்படு‌த்தலா‌ம் எ‌ன்று கூ‌றியதை ரா‌வ் சு‌ட்டி‌க்கா‌ட்டினா‌ர்.

‌‌நீ‌திப‌தி ‌பிரபா ஸ்ரீதேவ‌ன் அ‌ளி‌த்த ‌‌தீ‌ர்‌ப்பை பு‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம் த‌‌மிழக அரசு ச‌ட்ட‌‌த் ‌திரு‌த்த‌ம் செ‌ய்து ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் நேர‌த்தை ‌‌விரய‌‌ம் செ‌ய்து‌வி‌ட்டது எ‌ன்றா‌ர்.

த‌மிழக அரசு ‌மீதே அரசு வழ‌க்க‌றிஞ‌‌ர் கூ‌றிய புகாரா‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்‌ற‌த்‌தி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌‌ட்டது. இதையடு‌த்து வா‌தி‌ட்ட வழ‌க்க‌றிஞ‌ர் ரா‌வ், சம‌ச்‌சீ‌‌ர் க‌ல்‌வியை நட‌ப்பா‌ண்டி‌ல் செய‌ல்படு‌த்த முடியாது எ‌ன்றா‌ர்.

அடு‌த்த ஆ‌ண்டோ அ‌ல்லது அத‌ற்கு அடு‌த்த ஆ‌ண்டோ அம‌ல்படு‌த்தலா‌ம் எ‌ன்று அர‌சி‌ன் வாத‌ம் தொட‌‌ர்‌ந்து நடைபெ‌ற்றது.http://tamil.webdunia.com

மலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் டி.கே.ஏ. நாயருக்கு கல்தா!

பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து டி.கே.ஏ.நாயர் தூக்கப்படவுள்ளார். அவருக்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்பு எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது அவரிடம் தனிச் செயலாளராக இருந்த புலோக் சாட்டர்ஜி நியமிக்கப்படவுள்ளார்.

வரும் நவம்பர் முதல் சாட்டர்ஜி பிரதமர் அலுவலக செயலாளராகவுள்ளார். உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், முன்பு பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக இருந்துள்ளார். இப்போது இவர் வாஷிங்டனில் உலக வங்கியின் செயல் இயக்குனராக உள்ளார்.

இவருக்கு அடுத்த ஆண்டு வரை இந்தப் பதவிக்காலம் உள்ளது. ஆனாலும், புதிய பொறுப்பேற்க வசதியாக அவரை இந்தியா திரும்புமாறு பிரதமர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

பிரதமர் அலுவலகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என சோனியா கருதுவதே நாயர் தூக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், முக்கியமான காரணம், இவர் தனது கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே முக்கியத்துவம் தருவதும், அவர்களுக்கே மத்திய அரசில் முக்கிய பதவிகளைப் பெற்றுத் தருவதுமே காரணம் என்கிறார்கள்.

இதையடுத்து நாயர் மீது கடுப்பான பிற மாநில அதிகாரிகள், அதை பிரச்சனையாக்கியதையடுத்து அவரை பதவியை விட்டுத் தூக்க சோனியாவும் மன்மோகன் சிங்கும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

பஞ்சாப் மாநில ஐஏஎஸ் கேடரைச் சேர்ந்தவரான நாயர், அந்த மாநில அதிகாரிகளையும் அவ்வப்போது கவனித்துக் கொள்ளவும் தவறுவதில்லை என்கிறார்கள். (பிரதமர் பஞ்சாபைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மாநில அதிகாரிகளைக் கவனித்துக் கொண்டால், தனக்கு பிரச்சனை வராது என நாயர் கருதியிருக்கலாம்!).

நாயர் தூக்கப்பட்டு சாட்டர்ஜி அந்தப் பதவிக்கு வருவதால் அதிக பலன் அடையப் போவது பிரதமர் அலுவலக செயலாளர் எம்.என்.பிரசாத் தான். சாட்டர்ஜிக்குப் பதில் உலக வங்கி பதவிக்கு பிரசாத் நியமிக்கப்படவுள்ளார். இதனால் இவர் விரைவில் வாஷிங்டனுக்குச் செல்கிறார்.

பிரதமர் அலுவலத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்த நாயரைத் தான், 2009ம் ஆண்டு, இலங்கையின் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, மன்மோகன் சிங் தனது சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பி அதிபர் ராஜபக்சேவை சந்தித்துவிட்டு வரச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசா தொலைத் தொடர்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கும் விஷயத்தில் அந்த அமைச்சகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளவே பிரதமர் மன்மோகன் சிங் விரும்பவில்லை என்று இவர் எழுதி வைத்திருந்த குறிப்பு நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் தரப்பட்டு பரபரப்பானதும் குறிப்பிடத்தக்கது.http://thatstamil.oneindia.in

கொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்!

ராமநாதபுரம்: ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள பொருள்களை அபகரித்து தனக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மீது ராமநாதபுரத்தைச் சேர்ந்த கேபிள்டிவி ஆபரேட்டர் புகார் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், ராமநாதபுரம் எஸ்பி அனில்குமாரிடம் கலாநிதி மாறன் மற்றும் சுமங்கலி கேபிள் ஆபரேட்டர்கள் இருவர், ஏசி குமாரவேல் ஆகிய நால்வர் மீது இன்று காலை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், "நான் 1998 முதல் கேபிள் ஆபரேட்டராக இந்தப் பகுதியில் தொழில் செய்துவந்தேன்... 2008ல் இங்கே ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்க ரூ. 15 லட்சம் செலவில் தேவையான சாதனங்களை வாங்கி வைத்திருந்தேன்.

இந்நிலையில், கலாநிதி மாறன் தூண்டுதலில் என்னை மதுரை மதிச்சியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், என்னை மிரட்டினர். அந்தக் கட்டுப்பாட்டு அறையை மூடிவிடு, இல்லை என்றால் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சிலவற்றை உன் பேரில் எழுதி உள்ளே தள்ளிவிடுவேன் என்று ஏசி குமாரவேல் மிரட்டினார். அதைத் தொடர்ந்து, கலாநிதி மாறன் என்னை ஃபோனில் மிரட்டினார்.

என்னிடமிருந்து வலுக் கட்டாயமாக ரூ. 15 லட்சம் பெறுமான பொருள்களை அபகரித்துக் கொண்டு, என்னை மேலும் தொழிலில் ஈடுபட முடியாமல் தடுத்து விட்டனர். கடந்த 4 வருடங்களாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

என்னை ஃபோனில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய கலாநிதி மாறன், சுமங்கலி கேபிள் விஷன் விநியோகஸ்தர்கள் சரவணன் மற்றும் கமலக்கண்ணன், ஏசி குமாரவேல் ஆகியோர் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கேபிள் தொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தினாரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர், அல்லது காணாமல் போயுள்ளனர். அவர்கள் குறித்த விசாரணையை போலீஸார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று புகார் அளித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in

சென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெடிகுண்டு சிக்கியது

 சென்னையில், நகைப்பட்டறை நடத்தியவர் வீட்டு மொட்டைமாடியில், பிளாஸ்டிக் பந்தில் அடைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு சிக்கியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை, யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சுதாகரன். நகை பட்டறை வைத்துள்ளார். நேற்று காலை வீட்டின் மாடிக்குச் சென்ற அவர், பக்கத்து வீட்டை ஒட்டிய சுவரில் பிளாஸ்டிக் பந்து ஒன்று கிடப்பதை கண்டார்.

அதை கையில் எடுத்த சுதாகர் உற்றுபார்த்த போது, பந்தின் ஒருமுனையில் திரியும் சுற்றிலும் காகிதமும் சுற்றி இருந்தது. வெடிகுண்டாக இருக்குமோ என பயந்த அவர், அதை உடனே யானைக்கவுனி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தகவலறிந்து போலீஸ் நிலையத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், பந்தை சோதனை செய்தனர். காலி ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்திற்குள், பட்டாசு தயாரிப்பில் பயன்படும் வெடிமருந்துகள் நிரப்பி திரி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை செயல் இழக்கச் செய்ய, எடுத்துச் சென்றனர்.

நாட்டு வெடிகுண்டு குறித்து, நிபுணர்கள் கூறும்போது, சில மாதங்களுக்கு முன் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியிலும், மயிலாப்பூரில் ஒரு வீட்டிலும், இதேபோன்ற ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்து மூலம் தயாரித்த வெடிகுண்டுகளை எடுத்துள்ளோம், என்றனர்.

யானைக்கவுனி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

http://thatstamil.oneindia.in

செவ்வாய், 26 ஜூலை, 2011

கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா

அன்புள்ள தலைவா, வணக்கம். கழகத்தின் செயற்குழுவையும், பொதுக் குழுவையும் வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்கள். 

நமது எதிரிகள் நமது கழகத்தின் செயற்க்குழு, பொதுக் குழு கூட்டங்களில் ‘சகோதர யுத்தம்’ பிரமாதமாக நடக்கும் என்று காத்திருந்தார்கள். ஆனால், அந்த யுத்தத்திற்கான சங்கு முழங்கப்பட்டதும், உடனடியாகத் தலையிட்டு, ‘சாகும் வரை கலைஞர்தான் தலைவர்’ என்று பேராசிரியரை விட்டு அறிவிக்கச் செய்து, சகோதர யுத்தத்தை முளையிலேயே கிள்ளியெறிந்த சாணக்கியத்தனத்தை பாராட்டுகிறேன். யுத்தம் நடக்க வேண்டும் என்றாலும் அதற்கும் உன் மூளை பின்னணியில் இருந்தால்தான் முடியும் என்பது தெரியாதவர்களெல்லாம் தலைவர்களாக முயற்சிக்கிறார்கள் என்றால், அவர்கள் இன்னமும் முதிர்ச்சி பெறவில்லை என்பதுதானே தலைவா உண்மை.

அன்புத் தலைவா, கழகத்தின் எத்தனையோ செயற் குழுக்களையும், பொதுக் குழுக்களையும் கண்ட தொண்டன் நான். ஒருபோதும் உள்ளே அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால், நீ வெளியே வந்து பத்திரிகையாளர்களையெல்லாம் வாயால் பந்தாடுவதைப் பார்த்து புளங்காகிதம் அடைந்தவன். அப்படிப்பட்ட என்னால், கழகம் தோற்றத்திற்குப் பின்னால் ஏற்பட்ட நிதிச் சிக்கல் காரணமாக கோவை வர முடியாமல் போய்விட்டது. ஆனால் அந்தக் குறை சனிக்கிழமை நீங்கள் ஆற்றிய உரையைப் பத்திரிகைகளில் படித்துப் பார்த்ததும் போய்விட்டது. “நேர்மறையான விளைவுகளின் காரணமாக இன்று நாம் ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாகவாவது இருக்கக் கூடிய நிலைமையையும் பெறாமல், எதிர்க்கட்சிக் குழுக்களிலே ஒன்றாக இடம் பெற்றிருக்கின்ற நிலையில்...” என்று நீங்கள் பேசியதை படித்தபோது இரு கண்களில் இருந்து நீர் காவிரி ஆறாகப் பெருக்கெடுத்தது. எவ்வளவு பெரிய தோல்வி அது? 

FILE
“இந்த நிலை (அதாவது படுதோல்வி) நமக்கு நாமே தேடிக்கொண்ட முடிவு இது என்று சொன்னால், அது கேள்விக்கு இடமில்லாத ஒரு உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள். நான் உணர்ந்த காரணத்தால் இதைச் சொல்கிறேன”என்று தாங்கள் கூறியிருப்பதைப் படிக்கும் போதுதான் தலைவா சற்று குழப்பம் ஏற்பட்டது. நமக்கு நாமே தேடிக்கொண்டது என்று கூறுகிறீர்களே தலைவா? அப்படியானால் அதில் என்னைப் போன்ற தொண்டர்களுக்கும் பங்குண்டு என்று கூறுகிறீர்களா? அப்படியானால் நடந்த, நடத்தப்பட்ட குற்றச்செயல்கள் அனைத்திலும் தொண்டனுக்கும் பங்குண்டு என்கிறீர்களா? இது நியாயமா தலைவா? இந்தியாவில் எந்த ஊடகமும் இப்படி எங்களையும் சேர்த்து பேசவில்லை, ஆனால் நீங்கள் எங்களுக்கும் பங்கு தருகிறீர்களே? ரொம்ப தாராள மனசு தலைவா உனக்கு.


“அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, நாம் பதவிகளுக்காக - பவிசுகளுக்காக - ஆடம்பரங்களுக்காக - அரசியலுக்காக பதிவிகளைப் பெற்று அந்த அரசியலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அல்; நம்முடைய இனத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம்” என்று புரிந்துதான் பேசினீர்களா, இல்லை புரியாமல்தான் உளறினீர்களா தலைவரே? இப்படி நீங்கள் கூறியதை என்னாலேயே ஏற்க முடியவில்லையே, பிரபல தமிழ் பத்திரிகைகளில் படிக்கும் மக்கள் எவராவது ஒப்புக்கொள்வார்களா? 
FILE

பதவிக்காக இல்லை, இனத்திற்காக என்கிறீர்களே, இதைத்தானே கூறி, சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் எல்லாவனும் நம்மை கிழி கிழி என்று கிழித்தார்கள்? 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், டெல்லிக்குப் போனீர்கள், என்ன செய்தீர்கள்? ராசாவுக்காக, கனிமொழிக்காக, அழகிரிக்காக, தயாநிதி மாறனுக்காக என்று உங்கள் குடும்பத்து உருப்படிகள் ஒவ்வொன்றுக்கும் காபினெட் பதவி கேட்டு சோனியாவுடன் பேசினீர்கள், சிங்குடன் பேசினீர்கள், அவர்களுடைய தூதர்கள் உங்களை வந்து சந்தித்த போது அவர்களிடமும் பதவிப் பங்கு பற்றியே பேசினீர்கள். ஆனால் அப்போதுதான், இலங்கையிலே தமிழினம் அழிக்கப்பட்டது, அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன்? அப்படி ஒன்று நடந்துக்கொண்டிருப்பதாகவே நீங்கள் காட்டிக்கொள்ளவில்லையே. அங்கே ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று இப்போது ஆணித்தரமாக ஆதாரங்கள் வருகிறது. ஐ.நா. சபைக்காரனும் அறிக்கை கொடுத்துவிட்டான். நீங்களோ இனத்தைக் காக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்று கூறுகிறீர்கள்? எந்த இனத்தைக் கூறுகிறீர்கள் தலைவா? சிங்கள இனத்தையா, தமிழினத்தையா? கேப்பைக் கூழுல நெய் வடியற கதைய சொல்றீங்களே, நியாயமா? செத்தவங்க ஆத்மா நம்மை மன்னிக்குமா? 

“நமக்குக் கிடைத்திருக்கிற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, இலட்சியத்திற்கு, எதிர்காலத்திற்கு, சந்ததியினருக்கு, வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கிற தோல்வி என்பதை மறந்துவிடக் கூடாது” என்று கூறுகிறீர்களே? இதில் எதிர்காலம், சந்ததி, வருங்கால தலைமுறை... அதெல்லாம் புரிகிறது, கொள்கை, இலட்சியம் என்று கூறுகிறீர்களே? அது என்ன தலைவா? புதுசா கண்டு பிடித்திருக்கிறீர்களா? 

ஐந்தாண்டுக் காலம் பதவியில் இருந்தீர்கள், அதில் நீங்கள் சொல்லும் எந்தக் கொள்கை நிறைவேறியது? எந்த இலட்சியத்தை எட்டினோம்? தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்குப் போய் ஆண்டோம், உண்மை. ஆட்சியில் இருந்து ஆற்றியத் தொண்டுக்கு இப்போது ஒரு மூணு, நாலு பேர் திகார் சிறையில் இருக்கிறோம். இதுல என்ன இலட்சியம் இருக்குத் தலைவா? பகுத்தறிவுக்கு எதிரா காது குத்துகிறீங்களே, பெரியாருக்கு அடுக்குமா?


FILE
நமது கொள்கை பெரியார் சொன்ன பகுத்தறிவு, சமூக கொள்கை, அப்புறம் அண்ணா சொன்ன தன்னாட்சி... அதாவது கூட்டாட்சிக் கொள்கை. நீங்க கூட அண்ணா மறைந்த பிறகு தி.மு.க.வின் ஐம்பெரும் கொள்கை என்று ஒரு மாநாட்டில் பேசினீர்களே, நினைவிருக்கிறதா? 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம், 2. ஆதிக்கமற்ற சமூதாயம் அமைப்போம், 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், 4. வன்முறை தவிர்த்து வறுமையை ஒழிப்போம், 5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்று முழங்கினீர்களே, அதில் எதை இந்த 5 ஆண்டுக் காலத்தில் சாதித்தோம், சொல்லுங்க தலைவா?


அண்ணா வழி, ஊழலற்ற, தூய்மையான நிர்வாகத்தை தந்த வழி. அவர் டெலிபோனை மட்டும் வைத்துவிட்டு, மற்ற பொருட்களையெல்லாம் கொண்டு போங்கள் என்று முதல்வர் ஆனவுடன் அரசு அதிகாரிகளுக்குக் கூறினார். அவர் மகன் பரிமளம் ஒரு பதவிக்கும் வரவில்லை. அவர் மனைவி ராணி அம்மாள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து செத்துப்போனார். இப்படியா தலைவா நீங்கள் இருந்தீர்கள், இருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம் இல்லாத இடம் கட்சியிலும் இல்லை, ஆட்சியிலும் இல்லை. ஆக்டோபஸ் என்கிறார்களே, அப்படியல்லவா இருக்கிறது நிலைமை? இதில் அண்ணா வழியெங்கே, ஆட்டுக் குட்டி வழியெங்கே?

ஆதிக்கமற்ற சமூதாயம் அமைத்தீர்களா? குடும்ப ஆதிக்கத்தை அல்லவா கொடி கட்டிப் பறக்கச் செய்தீர்கள்? அதைக் கேள்வி கேட்டால், என் குடும்பம் மட்டுமே நல்லா இருக்கக் கூடாதா? என்று அங்கலாய்த்தீர்கள். சென்னையிலும், மதுரையிலும், டெல்லியிலும் உங்கள் குடும்ப ஆதிக்கம், மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆதிக்கம், இப்போ தலைமறைவு, தேவைதானா? 

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். நீங்களா? மனசாட்சியோடு சொல்லுங்கள் தலைவா? இந்தி தெரிந்த ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் தலைவி சோனியாவிடம் காம்ரமைஸ் பேச நீங்கள் தயாநிதி மாறனை அனுப்பவில்லை? இதுவா இந்தி எதிர்ப்பு? இங்கிலீஸ்ல பேசினால் சோனியா அம்மா கேட்க மாட்டாங்களா? எதுக்கு இந்தி? ஆதிக்கத்திற்கு தேவைப்படுது, அப்படித்தானே? 

வன்முறை தவிர்த்து வறுமை ஒழிப்போம், சொன்னீங்க. இலவசம் கொடுத்து வறுமை ஒழிப்போன்னு மாத்துங்க. சாராயம் வித்து வர்ற 15,000 கோடி ரூபாய்ல, எல்லாத்தையும் கொடுத்துவிட்டு, வறுமை இருக்கும் வரை இலவசமும் இருக்கும் என்று சொன்னீர்களா? அண்ணா இருந்தால் விடுவாரா உங்களை? 

மாநிலத்தில் சுயாட்சி? எப்போது.... எதிர்க்கட்சியா இருக்கும்போது. ஆளும் கட்சியா ஆன பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி, அதிலே உங்க குடும்பத்து பிள்ளைகளுக்குப் பங்கு! இதைதானே கூட்டாட்சின்னு கொஞ்ச நாளைக்கு முன்ன கூட காது குத்த பார்த்தீங்க? நீங்க யாருன்னு முழுமையா மக்கள் புரிஞ்சிக்கிட்டதுதான் தலைவா நமது தோல்வி. இதுக்கு மேல நம்மை நம்பறதுக்கு எந்த மக்களும் இல்லை, என்னைப் போன்ற தொண்டர்களும் இல்ல. ஏதோ அண்ணா உருவாக்கிய கட்சி, அந்தக் கொடி போட்ட கரை வேட்டி, தி.மு.க.வில இருக்கிறோம். அதுக்காக எங்களையும் - தமிழ்நாட்டு மக்களா நெனச்சி ஏமாத்தாதீங்க... தலைவா. 

FILE

ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துனுமா? ஆட்சியில இருக்கும்போது அவங்களைப் பற்றி நெனப்பு வரல. இப்போ வருதா? அவங்களையுமா இன்னமும் ஏமாத்தப் போறீங்க... போதும் தலைவா... கட்டிய கணவன், பெற்ற பிள்ளை, பாதுகாத்த போராளிகள், வாழ்ந்த நிலம், இருந்த கூரை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான் ஈழத்தில் தமிழன். அவன் விதி...விட்டுவிடுங்கள். அவனுள் உள்ள வீரம் அவனைக் காப்பாற்றும். 

அண்ணா வழி எது என்று பார்த்து, இதுக்கு மேலாவது திருந்தி நடப்போம். அடுத்த பொதுக் குழுக் கூட்டத்தில் நேரில் பார்க்கிறேன். உண்மையான தி.மு.க. தொண்டன்

இது தமிழ் வெப்துனியா இணையத் தளத்தின் கட்டுரை
நன்றி http://tamil.webdunia.com

அடக்குமுறைக்கு பெயர் போன ஜாபர்சேட் சிக்கினார்


சென்னை:உண்மைகளை மறைத்து, வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீடு பெற்று, அதை தனியார் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து வீடு கட்டி விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி., ஜாபர் சேட் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று திடீர், "ரெய்டு' நடத்தினர்.
நேற்று போலீசார் நடத்திய வேட்டையில், ஜாபர் சேட், தி.மு.க., ஆட்சியில், கருணாநிதியின் செயலராக இருந்த ராஜமாணிக்கம் உட்பட அதிகாரிகள் பலரும் அடங்குவர்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழக போலீஸ் உளவுத் துறையின் தலைமை பொறுப்பில் இருந்தவர் ஜாபர் சேட். இவர் கண்ணசைவில் தான் அரசின் அனைத்து நிகழ்வுகளும் நடந்தன. அரசு அதிகாரத்தின் அச்சாகச் செயல்பட்ட இவர், டெலிபோன் ஒட்டுக் கேட்பில் அதிக அளவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில், தேர்தல் கமிஷன் நெருக்கடி காரணமாக இவர் விடுப்பில் சென்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், ஜாபர் சேட் விடுப்பு முடிந்து மீண்டும் வந்தார். அப்போது, மண்டபம் அகதிகள் முகாமை கவனிக்கும் கூடுதல் டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டார்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், இவர் மீது பல புகார்கள் எழுந்தும், "பவர் புல்' இடத்தில் இருந்ததால், எந்த புகாரிலும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது ஜாபர் சேட் மீது, புகார்கள் வரத் துவங்கியுள்ளன.
லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டவரான சங்கர், சமீபத்தில் தமிழக தலைமைச் செயலரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2008ம் ஆண்டு, சென்னை திருவான்மியூர், காமராஜர் நகரில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டு மனை எண் 540, தி.மு.க., அரசால் ஜாபர் சேட்டிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலம் அவரது மகள் பெயருக்கும், இறுதியாக மனைவி பர்வீன் ஜாபர் பெயருக்கும் மாற்றப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில், சிலரது உதவியுடன் குற்றம் செய்யும் நோக்கில் சதித் திட்டத்தில் ஈடுபட்ட ஜாபர் சேட், முக்கிய தகவல்களை அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

மனைவி பர்வீன் ஜாபர் மூலம், அப்பகுதியில் மனை ஒதுக்கீடு பெற்றிருந்த முன்னாள் முதல்வரின் செயலராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கருடன் சேர்ந்து, தி.நகரில் உள்ள லேண்ட் மார்க் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து, இந்த மனையை கட்டடமாகக் கட்டியுள்ளார். இந்த விஷயத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தை ஏமாற்றி, ஜாபர் சேட் உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் சுயலாபம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பரிசீலித்த தலைமைச் செயலர், தமிழக டி.ஜி.பி., ராமானுஜத்திற்கு பரிந்துரைத்தார். மனு மீது விசாரணை நடத்துமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் மகேந்திரன் உத்தரவின் பேரில், ஐ.ஜி., குணசீலன் மற்றும் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.லஞ்ச ஒழிப்புப் பிரிவில், ஜாபர் சேட் மற்றும் சிலர் மீது கூட்டுச் சதி, மோசடி மற்றும் லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவுகள் என, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மனைவியை சமூக சேவகர் என்று கூறிவீட்டு வசதி வாரிய வீடு பெற்றவர்:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில், திருவான்மியூர் புறநகர் திட்டத்தில் காமராஜர் நகரில் உள்ள, 540வது மனை, 2008ம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி ஜாபர் சேட்டுக்கு ஒதுக்கப்பட்டது. அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் அப்பழுக்கற்ற அரசு ஊழியருக்கான பிரிவின் கீழ் இந்த ஒதுக்கீட்டுக்காக, வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசாணை (எண்: 429) பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களுக்குள் இந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

பின், இதே மனை, ஜாபர் சேட்டின் மகள் கல்லூரி மாணவி ஜெனிபர் பெயருக்கு அரசின் விருப்புரிமையில், "சமூக சேவகர்' பிரிவில் ஒதுக்கப்பட்டது. இதன் பின், சில மாதங்களிலேயே இந்த ஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டு, ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாபருக்கு அரசின் விருப்புரிமையில், "சமூக சேவகர்' பிரிவில் ஒதுக்கப்பட்டது.
மனையின் பரப்பு, 4,756 சதுர அடி; இதன் மதிப்பு 1.26 கோடி ரூபாய். இத்தொகையை அவர் இரண்டே தவணைகளில் செலுத்தி, விற்பனை பத்திரத்தையும் பெற்று விட்டார்.
இதேபோல், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவரது செயலர்களில் ஒருவரான ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் பெயருக்கு, ஜாபர் சேட் மனைவிக்கு ஒதுக்கப்பட்ட மனையின் அருகில் உள்ள, 538வது மனை, 2008ல் ஒதுக்கப்பட்டது. இதன் பரப்பு, 4,668 சதுர அடி; இதன் மதிப்பு 1.12 கோடி ரூபாய். இத்தொகையும் முழுமையாகச் செலுத்தப்பட்டு, விற்பனை பத்திரமும் பெறப்பட்டுவிட்டது.

இந்த இரு மனைகளும் சேர்ந்து மொத்தம், 9,424 சதுர அடி வருகிறது. இவர்கள் இருவரும், லேண்ட் மார்க் கட்டுமான நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்துக் கொண்டு, ஒரு கட்டுமான நிறுவனத்தை துவக்கி, வர்த்தக நோக்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, 2009ல் இதற்கான பணிகளை துவக்கினர்.நான்கு மாடிகள் கொண்ட இந்த வளாகத்தில் கட்டப்பட்ட 12 வீடுகளும், சதுர அடி 8,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. ஜாபரின் மனைவியை சமூக சேவகராகக் காட்டி, அரசு மனையை பெற்று, அதில் வீடு கட்டி பல கோடி ரூபாய் லாபம் அனுபவித்தது, இவை இரண்டின் மூலம், வீட்டு வசதி வாரியத்தை ஏமாற்றியது தான், தற்போதைய பிரச்னையின் அம்சம்.

ரெய்டு நடந்த இடங்கள்

1. சென்னை அண்ணா நகர், "ஆர்' பிளாக், 14வது தெருவில் உள்ள ஜாபர் சேட்டின் வீடு.

2. அவரது வீடு அருகில் உள்ள கஸ்தூரி ராஜ் என்ற பொறியாளர் வீடு.
3. மேற்கு மாம்பலத்தில், "ஈ.ஏ.பி.டி., சொலுயூஷன்' நிறுவனம் நடத்தி வரும் ஜெய்சங்கர் என்பவரது அலுவலகம்.
4. எழும்பூர், ரித்தர்டன் சாலையில் உள்ள நஜிமுதீன் என்பவர் வீடு.
5. வேப்பேரியில் உள்ள, பர்னாஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிட்.,
6. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின், நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி வீடு.
7. சென்னை திருவான்மியூரில் உள்ள ஜாபர் சேட்டின் நண்பர் 
பல்ராஜ் ஜான்சன் வீடு.
8. தி.நகரில் உள்ள லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகம்.
இந்த இடங்களில், காலை 8 மணிக்கு, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.சென்னை தவிர, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஜாபர் சேட்டின் மாமனார் சலீமின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

அண்ணா நகர்: சென்னை, அண்ணா நகரில் உள்ள ஜாபரின் வீட்டில், ஏ.டி.எஸ்.பி., சுப்பையா, ஜெயலட்சுமி தலைமையில், இன்ஸ்பெக்டர் சுப்பையா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டவர்கள் காலை அதிரடியாக உள்ளே நுழைந்தனர். வீட்டில், ஜாபர் சேட்டின் உறவினர் பெண் ஒருவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது ஒத்துழைப்புடன், வீட்டின் அனைத்து பகுதிகளும் முழுவதுமாக சோதிக்கப்பட்டன.
ஜாபர் சேட்டின் வீட்டில் இருந்து சில ஆவணங்களையும், ஜாபர் பயன்படுத்திய, "லேப் டாப்பும்' ரெய்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

பிற்பகல் 1.45 மணிக்கு ரெய்டு முடிந்து, அனைத்து அதிகாரிகளும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது, ஜாபர் சேட்டின் வீட்டில் இருந்து பல ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதில், புகார் தொடர்பான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திருவான்மியூர்: ஜாபர் சேட்டின் நண்பரான வங்கி மேலாளர் பல்ராஜ் ஜான்சனின், சென்னை கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் நகர், முதல் தெருவில் உள்ள வீட்டில் காலை 8 மணிக்குச் சென்ற, 15க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், மதியம் 1 மணி வரை தீவிர விசாரணை நடத்தினர். ஐந்து மணி நேரம் நடந்த இந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வேப்பேரி வள்ளியம்மாள் தெருவில், பர்னாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திலும் சோதனை நடந்தது.

பெரியகுளம்: பெரியகுளத்தில், ஜாபர் சேட்டின் மாமனாரும், 
முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான, டாக்டர் சலீம் வீடு உள்ளது. இவரது வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர், நேற்று காலை 11.30 மணி முதல், மதியம் 2.20 வரை சோதனை நடத்தினர். டி.எஸ்.பி., ஜான் கிளமண்ட், இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். விசாரணை முடியும் வரை வீட்டின் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், சலீம், அவரது மனைவி நூர், மருமகள் நிகார் ஆகியோரிடம் போலீசார் பல கேள்விகளை கேட்டு பதில் பெற்றுள்ளனர். முக்கிய ஆவணங்கள் பலவற்றை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மண்டபம் வீட்டில் ஜாபர்!: மண்டபம் சேதுரஸ்தா முதல் தெருவில் உள்ள பேரூராட்சி மூன்றாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில், ஜாபர் சேட் தற்போது வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சென்னையில் உள்ள இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையை அடுத்து, மண்டபத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடக்கலாம் என, காலை 9.30 மணி முதல் பத்திரிகையாளர்கள் குழுமினர்.

காலை 10.30 மணிக்கு வழக்கம் போல, மண்டபம், "கேம்ப்' அலுவலகத்திற்கு வரும் ஜாபர் சேட், பத்திரிகையாளர்களை தவிர்ப்பதற்காக நேற்று அலுவலகம் வரவில்லை.
அவரிடம் மொபைல் போனில் நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, ""இந்த விசயத்தில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை; பேட்டி கொடுப்பதாக இல்லை; புறப்பட்டு செல்லுங்கள்,'' என, கடுகடுப்புடன் கூறினார்.பின், மண்டபம் பகுதியில் அவரை காண முடியவில்லை; சென்னை சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.
http://www.dinamalar.com