புதன், 27 ஜூலை, 2011

இந்த ஆண்டுக்கான எனது ஆயிரமாவது(1000) வலைப்பதிவு


இது எனது இந்த ஆண்டின் ஆயிரமாவது பதிவாகும்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வசிக்கும் ஊடகவியலாளரான நான் ஏனைய ஊடகங்களில் நான் படித்த சுவாரசியமான செய்திகளை அந்த ஊடகங்களின் மூலத்தை அதாவது இது இந்த ஊடகத்தின் செய்தி என்ற மூலத்தை குறிப்பிட்டு எனது நண்பர்கள் மற்றும் என்னை அறிந்த வாசகர்களுக்கு அது சென்றடையட்டும் என்ற எண்ணத்தில் எனது தளத்தில் இதுவரை பதிவேற்றியிருக்கிறேன்.
தொலைக்காட்சி ஒன்றின் செய்தி ஆசிரியர் சமூக அரசியல் செயற்பாட்டாளர் என்று பலவேறு தளங்களில் பணி புரிவதால் ஏற்பட்டுள்ள வேலைப் பழு காரணமாக என்னால் இந்த வருடம் சுயமான பதிவுகளை எழுத கால அவகாசம் கிடைக்கவில்லை. நினைவழியா வடுக்கள்(மணற்கேணி மாத இதழில் தொடராக வெளிவருகிறது) இரண்டாம் முள்ளிவாயக்கால் ஆகிய நூல்களை நான் தற்போது எழுதிக் கொண்டிருப்பதும் கால அவகாசம் போதாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமாகும்.
எனது 35 வருட ஊடக அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டப்பணயத்தில் உண்மையின் பின்னால் ஒழிந்திருக்கும் பொய்களையும்,பொய்களின் பின்னால் ஒழிந்திருக்கும் உண்மைகளையும் நான் கட்டுடைத்து வெளிக் கொணர்ந்திருக்கிறேன்.
காந்தி தேசத்தின் மறுபக்கம், தமிழ் தளத்தில் ஊடகவியல், சாதியமும் தமிழ் தேசியமும்,மாறகின்ற தளங்களும் மாறா மனோபாவங்களும் என்பன நான் என்னுடைய ஊடக மற்றும் விடுதலைப் போராட்ட பயணத்தில் எழுதியவற்றில் எனக்கு மனத் திருப்தி தந்தவையாகும்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீவிர ஆதரவாளனான நான் உலக தமிழ் சிந்தனை மையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் உலகத் தமிழர்களுடைய பல்துறை சாhந்த சக்தி வழங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் உலகத் தமிழ் மக்களுக்கு பொதுவான தமிழ் ஊடகக் கருத்தில் ஒன்று உருவாக்ப்பட்டு லக ஊடகப்பரப்பில் மேற்குலக ஆதிக்க ஊடகங்களுக்கு இணையாக முற்போக்கான தமிழ் ஊடகத் தளம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். இன்றுவரை என்னால் முடிந்தவரை இதை நோக்கி செயற்படுகிறேன்.
அன்புடன்
சிவா சின்னப்பொடி

4 கருத்துகள்:

தங்க முகுந்தன் சொன்னது…

வாழ்த்துக்கள்!

சிவா சின்னப்பொடி சொன்னது…

நன்றி தங்க முகுந்தன்

Amudhavan சொன்னது…

பாரீஸில் இருந்துகொண்டு அவ்வப்போது நடைபெறும் பல செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றிக்கொண்டிருக்கும் உங்கள் சுறுசுறுப்பு ஆச்சரியப்படவைக்கிறது. தங்களுக்கு வாழ்த்துக்கள்.தங்கள் குறிக்கோள் விரைவில் நிறைவேறவேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிவா சின்னப்பொடி சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதவன்