ஞாயிறு, 10 ஜூலை, 2011

உபியில் கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது: 11 பேர் பலி, 100 பேர் காயம்

லக்னோ: மேற்கு வங்கம் ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே திடீர் என்று தடம் புரண்டது. இதில் 100 பேர் காயம் அடைந்தனர்.

மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற கல்கா எக்பிரஸ் இன்று 12.30 மணி அளவில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மற்றும் பத்தேஹ்பூர் மால்வா ரயில் நிலயங்களுக்கு இடையே செல்கையில் திடீர் என்று தடம் புரண்டது. ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன.

எமர்ஜென்சி பிரேக்கை திடீர் என்று பயன்படுத்தியதால் தான் ரயில் தடம் புரண்டதாகக் கூறப்படுகின்றது. ரயில் தடம் புரண்டபோது மணிக்கு 110 கி. மீ. வேகத்தில் சென்றுள்ளது.

இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர், 100 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். 2 மருத்துவ ரயில்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

இந்த சம்பவத்தால் ஏசி பெட்டிகளில் தீப்பொறி எழுந்ததாகக் கூறப்படுகின்றது.

விபத்துக்குள்ளான கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து விபரம் அறிய விரும்புவோர் 05322407313, 0532240828, 05322408149 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

இந்த விபத்தால் ஹவுரா-டெல்லி வழி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/10/howrah-delhi-train-kalka-mail-derails-11-dead-aid0128.html

கருத்துகள் இல்லை: