வெள்ளி, 8 ஜூலை, 2011

சன் டிவி சக்சேனாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

தீராத விளையாட்டுப்பிள்ளை படம் மூலம் திரைப்பட விநியோகஸ்தர் சேலம் செல்வராஜ் கொடுத்த மோசடி புகாரின் அடிப்படையில் சன் டிவி சக்சேனாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.


சேலத்தை சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் செல்வராஜூக்கு, தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமை தருவதாக சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா கூறி ரூ.1.25 கோடியை வாங்கிக் கொண்டு, வினியோக உரிமையை தராமல் ஏமாற்றியதாக கூறினார்.இதனையடுத்து சக்சேனா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த சண்முகவேல் என்ற பட வினியோகஸ்தர், தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தின் வினியோகம் தொடர்பாக சக்சேனாவும், அவரது உதவியாளர் அய்யப்பனும், அறையில் சிறை வைத்து உருட்டுக்கட்டையால் அடித்து உதைத்ததாகவும், கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இதைதொடர்ந்து புதிய வழக்கில் நீதிமன்ற காவலுக்காக சக்சேனவை இன்று (8-ந் தேதி) கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி, மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சக்சேனவை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். இதில் அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: