சனி, 23 ஜூலை, 2011

15 ஆண்டுகளாக போலீஸ் "லாக்கப்'பில் இருக்கும் அனுமன்

பாட்னா: பீகார் மாநிலத்தில், கடந்த 15 ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் அனுமன் சிலையை விரைவில் மீட்டு வந்து, கோவிலில் வைப்பதாக, முன்னாள் போலீஸ் அதிகாரி களமிறங்கியுள்ளார். பீகார் மாநிலம், போஜ்புரி மாவட்டத்தில் பாதாரா பகுதியில் உள்ள கவுண்டி கிராமத்தில், 175 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்காஜீ கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பழமையான அனுமன் சிலை, கடந்த 1994ம் ஆண்டு ஜூன் மாதத்தில், கொள்ளையடிக்கப்பட்டது. எனினும், தீவிர விசாரணை நடத்திய கிருஷ்ணா நகர் போலீசார், குற்றவாளிகளை கைது செய்ததுடன், அனுமன் சிலையையும் உடனடியாக மீட்டனர். பின்னர், அந்த சிலை கிருஷ்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டது. இந்த சிலை கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், மீட்கப்பட்ட அனுமன் சிலையை, கோவிலில் பழைய இடத்திலேயே வைக்க, ஊர்க்காரர்கள் முடிவு செய்து கோர்ட்டை அணுகினர். சர்வதேச மார்க்கெட்டில், அந்த சிலையின் விலை 3 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, 45 லட்ச ரூபாய் பிணைய தொகையை கோர்ட்டில் கட்டிவிட்டு, சொந்த பொறுப்பில் சிலையை எடுத்துச் சென்று கோவிலில் வைக்கலாம் என்று, கோர்ட் கூறிவிட்டது. அவ்வளவு பெரிய தொகையை, யாரும் சொந்த செலவிலிருந்து செலுத்த முன்வரவில்லை. எனவே, கடந்த 15 ஆண்டுகளாக, அனுமன் சிலை போலீஸ் பாதுகாப்பில், கிருஷ்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், வருண பகவான் உள்ளிட்ட வேறு சில கடவுள் சிலைகளும், மீட்டுச் செல்ல ஆளின்றி, போலீஸ் ஸ்டேஷனிலேயே உள்ளன. இந்நிலையில், பீகார் மாநில மத அறக்கட்டளை தலைவரும், பாட்னாவில் உள்ள மகாவீர் கோவில் அறக்கட்டளை செயலருமான கி÷ஷார் குணால், போலீஸ் பாதுகாப்பில் உள்ள சிலைகளை மீட்டு, பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்யப் போவதாக அறிவித்துள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான கி÷ஷார் குணால், சிலைகளை மீட்பது தொடர்பாக, போஜ்பூர் எஸ்.பி.,யை சந்தித்துப் பேசி, உரிய தீர்வை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்," சிலைகளை மீட்டு பழைய இடங்களில் வைக்க, கடுமையாக உழைத்து வருகிறோம். உழைப்புக்கு உரிய பலனை விரைவில் அடைவோம் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
nantry dinamalar.com

1 கருத்து:

வலையகம் சொன்னது…

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about