சனி, 16 ஜூலை, 2011

ஜெ., மீண்டும் முதல்வர் ஆனதற்கு17 கி.மீ., தேர் இழுத்த தொண்டர்

செஞ்சி:செஞ்சி அருகே அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், ஜெ., முதல்வரானதற்காக அலகு குத்தி, 17 கி.மீ., தூரம் தேர் இழுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, வீரமநல்லூர் கிளையைச்சேர்ந்தவர் வீராசாமி. அ.தி.மு.க., தொண்டர். இவர், செம்மேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விற்பனையாளராக உள்ளார். ஜெ., மீண்டும் முதல்வரானால், செம்மேடு மதுரை வீரன் கோவிலில் இருந்து தேர் இழுத்து அங்காளம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டி இருந்தார்.இதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஜெ., முதல்வரானதால், நேற்று இவர் தனது நேர்த்திக் கடனை செலுத்தினார். செம்மேடு வீரன் கோவிலில் காலை 8 மணிக்கு அலகு குத்தி, தேர் இழுத்து புறப்பட்டார். முன்னதாக நடந்த பூஜையில், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்மொழி ராஜதத்தன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.செம்மேட்டில் துவங்கி வேலந்தாங்கல், நல்அரசன்பட்டு, ஆத்திப்பட்டு, மானந்தல், தாயனூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, 17 கி.மீ., தூரம் தேர் இழுத்துச் சென்ற போது, கிளை நிர்வாகிகள் உற்சாகமான வரவேற்பளித்தனர்.பிற்பகல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று, வீராசாமி தனது நேர்த்திக் கடனை நிறைவு செய்தார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=276452

கருத்துகள் இல்லை: