வெள்ளி, 8 ஜூலை, 2011

மும்பையில் 2- வது நாளாக கனமழை: ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு

மும்பை: மும்பையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்துக் கொண்டிருக்கிறது. இதனால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மும்பையில் நேற்று முதல் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 8.30 மணி வரை கொலாபாவில் 162.8 மிமீ, சாண்டாகுரூஸில் 116 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இந்த தொடர் கன மழையால் மத்திய ரயில்வேயின் ரயில் சேவைகள் 15 நிமிடங்களும், மேற்குப் பகுதி ரயில் சேவை 10 நிமிடங்களும் தாமதனமானது.

சாலைகள் எங்கும் மழை நீர் ஓடுவதால் வாகனங்கள் மெதுவாகச் சென்றன. ஆனால் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இது தவிர இன்று காலை விமானப் போக்குவரத்தும் சிறிது பாதிக்கப்பட்டது.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 10 மணி முதல் 10. 20 மணி வரை விமானங்கள் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு விமான சேவைகள் வழக்கம் போல் நடந்து வருகிறது என்று மும்பை சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

விலேபார்லே, போரிவாலி, கன்டிவாலி, மாலாட், அந்தேரி, தாராவி போன்ற பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீடுகளோ, சுவர்களோ இடிந்து விழுந்ததாக இதுவரை எந்தவித தகவலும் இல்லை. ஆனால் 10 இடங்களி்ல் மரங்கள் விழுந்துள்ளது.

மழை தொடரும் என்றும், சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/08/heavy-rains-disrupt-mumbai-air-rail-traffic-aid0128.html

கருத்துகள் இல்லை: