வியாழன், 28 ஜூலை, 2011

மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்குதல்- 30 பேர் காயம்

ராமேஸ்வரம்: தமிழக மீ்னவர்கள் மீது இலங்கை கடற்படை காடையர்கள் மீண்டும் வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். நடுக் கடலில் நடந்த இந்த அட்டூழியச் செயலால் தமிழக மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.

ராமேஸ்வரம், வேதாரன்யம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென இலங்கைப் படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை முற்றுகையிட்ட அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களைத் தாக்கினர். அவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவிகள், மீன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டனர்.

இன்று அதிகாலை நடந்த இந்த தாக்குதலில் 30 மீனவர்கள் காயமடைந்தனர். பின்னர் அனைவரையும் மிரட்டிய கடற்படை அங்கிருந்து போகுமாறு விரட்டியது. இதையடுத்து தமிழக மீனவர்கள் கரை திரும்பினர். இதுதொடர்பாக ராமேஸ்வரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
http://thatstamil.oneindia.in/news

கருத்துகள் இல்லை: