சனி, 2 ஜூலை, 2011

சனல் 4 காணொலியின் மூலப்பிரதி விவகாரம் – குழம்பிப் போயுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்

சனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற காணொலியின் மூலப்பிரதி என்று கூறப்பட்டு நேற்று சுவர்ணவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொலிப் பதிவு குறித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல குழப்பமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதுவே மூலப்பிரதி என்றும் அதை பிரித்தானியாவில் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் அவர் நேற்றிரவு கூறியிருந்தார்.

ஆனால் இன்று அவர், இந்தக் காணொலி எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே இந்தக் காணொலி சுவர்ணவாகினியில் நேற்று ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று இந்தக் காணொலியை சுவர்ணவாகினியிடம் இருந்து மேலதிக விசாரணைகளுக்காக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அது ஆராயப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவப் பேச்சாளரின் முன்னுக்குப் பின் முரணான இந்தக் கருத்துக்கள் கொழும்பு ஊடக வட்டாரங்களில் பலத்த சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20110702104191

கருத்துகள் இல்லை: