வியாழன், 7 ஜூலை, 2011

பாதாள அறை பொக்கிஷங்கள் மதிப்பு "ரூ.5 லட்சம் கோடிக்கு மேல்'

திருவனந்தபுரம், ஜூலை 6 : திருவனந்தபுரம் பத்மநாவசுவாமி கோயிலின் பாதாள அறைகளில் இதுவரை கிடைத்துள்ள தங்க,வைர ஆபரணங்கள்,விக்கிரங்கள் உள்ளிட்டவற்றின் இன்றை சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், வரலாற்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசுவாமி கோயிலில்,மொத்தமுள்ள 6 பாதாள அறைகளில், 5 அறைகளை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய 7பேர் குழு திறந்து அதிலிருந்த பொருட்களை கணக்கெடுத்து வருகிறது.
இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் தங்கம், வைரத்தலான ஆபரணங்கள், அரிய விலைமதிப்பில்லாத ரத்தினக் கற்கள், விக்கிரகங்கள், நித்ய பூஜைக்கான பொருட்கள், பத்மநாப சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள் போன்றவற்றை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
இதுவரை 5 பாதாள அறைகளில் கிடைத்துள்ள பொக்கிஷங்களின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று மூத்த அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், வரலாற்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு திருவிதாங்கூர் மன்னர்கள், போர்ச்சுகல், நெதர்லாந்து, இங்கிலாந்து, தூரக் கிழக்கு நாடு வர்த்தகர்கள் ஏராளமாக அரிய விலைமதிப்பற்ற பொருள்களை காணிக்கையாக அளித்துள்ளதாக கேரள மாநில முன்னாள் தலைமை செயலர் ஆர். ராமசந்திரன் நாயர் தெரிவித்துள்ளார். ராஜராஜ சோழன், கிருஷ்ண தேவராயர் உள்ளிட்ட அரசர்களும் அரிய பொருட்களை காணிக்கையாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பாதாள அறைகளில் கிடைத்துள்ள பொக்கிஷங்களின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.5லட்சம் கோடியாக இருக்கும் என்பதுடன் உலகின் செல்வந்தர் கோயில்கள் வரிசையில் முதல் இடத்தில் இந்த கோயில் இருக்கும் என்று மற்றொரு ஒய்வுபெற்ற தலைமை செயலர் சி.பி. நாயர் கூறினார்.
6வது அறை பலத்த பாதுகாப்புடன் இரும்பு கதவு, மரக்கதவு,மற்றொரு இரும்பிலான கதவுகளை கொண்டுள்ளது. இதை பார்க்கும் போது, அதில் விலை மதிப்பில்லாத அரிய பொக்கிஷங்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எஞ்சிய 6வது அறையை திறக்க நிபுணர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
அடுத்த வார இறுதியில் இது திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கெடுக்கப்படும். இந்நிலையில் பாதாள அறைகளில் கிடைத்த அனைத்தும் கோயிலுக்குச் சொந்தமானது என்றும் அதில் அரசு உரிமை கோராது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
http://www.dinamani.com

கருத்துகள் இல்லை: