வெள்ளி, 22 ஜூலை, 2011

5 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடம்மாற்றியது தமிழக அரசு

சென்னை: 5 போலீஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (சட்டம்- ஒழுங்கு) செந்தில்குமார், கோவை நகர துணை போலீஸ் கமிஷனராக (குற்றம் மற்றும் போக்குவரத்து) மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்தியபிரியா, சேலம் நகர துணை போலீஸ் கமிஷனராக (சட்டம்-ஒழுங்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை (போச்சம்பள்ளி) கமாண்டர் ஆர்.திருநாவுக்கரசு, மதுரை மாநகர துணை போலீஸ் கமிஷனராக (சட்டம்-ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளார்.

போலீஸ் சூப்பிரண்டு துரைராஜ், சிறப்பு பிரிவு சி.ஐ.டி.யின் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு போலீஸ் சூப்பிரண்டான சம்பத்குமார், சென்னையில் கியூ பிராஞ்ச் சி.ஐ.டி. பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/22/5-police-officials-transferred-5-aid0128.html

கருத்துகள் இல்லை: