வியாழன், 28 ஜூலை, 2011

அதிமுக எம்.பிக்களுடன் ஜெ. திடீர் ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 1ம் தேதி துவங்கவிருக்கும் நிலையில் அதிமுக எம்.பி.க்களுடன் முதல்வர் ஜெயலலிதா திடீர் ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தனது கட்சி எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்தது. இதில் மக்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, செம்மலை, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆனந்தன், பி. குமார், ஓ.எஸ். மணியன், சி. சிவசாமி, கே. சுகுமார், பி. வேணுகோபால், மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், பாலகங்கா, ரபி பெர்னார்ட், இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குளிர்கால கூட்டத் தொடரில் 2ஜி ஊழல் விவகாரத்தில் திமுகவுக்கு மேலும் நெருக்கடி கொடுப்பது பற்றியும், நாடாளுமன்றத்தில் செயல்பட வேண்டிய விதம் பற்றியும் எம்.பிக்களுக்கு ஜெயலலிதா அறிவுரை வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை: