புதன், 6 ஜூலை, 2011

ஏர்செல்லுக்கு உரிமம் வழங்க தயாநிதி வேண்டுமென்றே தாமதம் செய்தார்: முன்னாள் செயலர்

புதுதில்லி, ஜூலை.6: தனது சகோதரரின் நிறுவனம் பலன் அடைவதற்காக ஏர்செல் நிறுவனத்தை தயாநிதி மாறன் குறிவைத்தார் என்று அவரது முன்னாள் செயலர் நிருபேந்திர மிஸ்ரா சிபிஐயிடம் தெரிவித்துள்ளதாக சிஎன்என்-ஐபிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான சிபிஐ விசாரணையில் மிஸ்ரா முக்கிய சாட்சியாக உள்ளார்.
சிவசங்கரன் உரிமையாளராக இருந்தபோது ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதை தயாநிதி மாறன் நிறுத்திவைத்தார் என்று மிஸ்ரா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.
ஏர்செல்லின் துணை நிறுவனங்கள் குறித்தும், ஏர்செல் நிறுவனம் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள் குறித்தும் அவசியமே இல்லாமல் வேண்டுமென்றே தயாநிதி மாறன் கேள்விகளை எழுப்பியதாக மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தயாநிதியின் இந்த தந்திரங்கள் காரணமாக ரூ 750 கோடி அளவுக்கு தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் பலனடைந்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
http://www.dinamani.com

கருத்துகள் இல்லை: