வெள்ளி, 8 ஜூலை, 2011

ஸ்கைப்புடன் இணைந்து புதிய வசதியைத் தரும் பேஸ்புக்

கூகுள் தனது சோஷியல் நெட்வொர்க்கான கூகுள் ப்ளஸ்ஸை சோதனை ஓட்டமாக அறிவித்த அடுத்த சில தினங்களில், பேஸ்புக் புதிய சேவையை அறிவித்துள்ளது.

அதுதான் பேஸ்புக் வீடியோ சேட். இதற்காக ஸ்கைப் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது பேஸ்புக்.

இந்த தகவலை புதன்கிழமை அறிவித்த பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜுக்கர்பெர்க், "இந்தப் புதிய வசதியால் பல மில்லியன் பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் பயனடைவார்கள்", என்றார்.

மேலும், பேஸ்புக்கின் பயனாளர் எண்ணிக்கை முன்பை விட பல மில்லியன்கள் உயர்ந்து, 750 மில்லியன்களாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் பேஸ்புக்கை விட, ஸ்கைப்புக்கு எக்கச்சக்க பலனைத் தரும். காரணம் 2003-ல் ஆரம்பிக்கப்பட்ட இன்டர்நெட் போன் வசதி சேவையான ஸ்கைப்பை இன்று 145 மில்லியன் பேர்தான் பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக்குடன் கைகோர்த்ததன் மூலம் மேலும் 600 மில்லியன் மக்களைச் சென்றடையும் வாய்ப்பு ஸ்கைப்புக்கு கிடைத்துள்ளது.

இன்னொரு பக்கம் ஸ்கைப்பை 8.5 பில்லியன் டாலருக்கு வாங்கும் முயற்சியில் உள்ள மைக்ரோசாப்ட் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. மைக்ரோசாப்டுக்கு பேஸ்புக்கிலும் குறிப்பிட்ட சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in/news/2011/07/08/facebook-launches-video-chat-with-skype-aid0136.html

கருத்துகள் இல்லை: