வியாழன், 14 ஜூலை, 2011

கனிமொழிக்கு காட்டிய சென்டிமெண்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா

சென்னை: கனிமொழிக்குக் காட்டிய சென்டிமென்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும். அன்று அவர் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அவர் மகளே பாதிக்கப்பட்டுள்ளார் என்றார் நடிகை ரஞ்சிதா.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா தோன்றிய செக்ஸ் வீடியோ பொய்யானது என கூறி வருகின்றனர்.

அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்த சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் ரஞ்சிதா புகார் அளித்துள்ளார்.

இப்போது முன்னணிப் பத்திரிகைகளின் நிருபர்கள் சிலரை அழைத்து தனியாக பேட்டி கொடுத்து வருகிறார் ரஞ்சிதா.

அப்படி சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில், "முன்பை விட நான் இப்போது அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். இதற்குக் காரணம் தியானம்தான். கடந்த சில வருடங்களாக யோகா பயிற்சி செய்து வருகிறேன். அது எனக்கு வலிமையையும், அழகையும் கொடுத்து உள்ளது. இப்போதைய எனது நடவடிக்கைகள் அவற்றின் பிரதிபலிப்புதான்.

தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். அதுதான் கருணாநிதி, கனிமொழி ஆகியோர் விஷயத்தில் நடந்துள்ளது. நான் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். அப்போது கருணாநிதி எனக்கு பாதுகாப்பாக இல்லை. அப்போது அமைதியாக இருந்தார். ஆனால் கனிமொழிக்கு ஒன்று என்றதும் பதறுகிறார். கனிமொழிக்கு காட்டும் சென்டிமென்டை எனக்கு காட்டாதது ஏன்?

என்னை அரசியலுக்கு அழைக்கிறார்கள். ஆனால் எனக்கு அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை. என் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து விட்டன. ஒரு பெண்ணான எனனால் அரசியலில் சிறப்பாக பணியாற்ற முடியாது என்று கருதுகிறேன்.

என்னைப்பற்றி நிறைய அவதூறுகள் வந்தன. பழி வாங்கினார்கள். என் பெற்றோரும், சகோதரியும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். எனது மொத்த குடும்பமும் என் பக்கம் இருந்தது.

இனி மீண்டும் நடிக்க மாட்டேன்:

தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராக இருப்பேன். ஆசிரம பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். 100 சதவீதம் சமூக சேவைப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். ஆசிரமம் சார்பில் இலவச கல்வி அளித்தல், உணவு வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்றவை தினமும் நடக்கின்றன. அதில் இணைந்து செயல்படுவேன். ஒரு மருத்துவமனை கட்டவும் விருப்பம் இருக்கிறது.

சினிமாத் துறையில், நடிகர்-நடிகைகள் யாருடனும் நான் தொடர்பில் இருக்கவில்லை. அவர்கள் ஆதரவு எனக்கு தேவையும் இல்லை. நானும் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்.

அடுத்த சில ஆண்டுகளில் சன்னியாசியாக மாறப் போகிறேன்," என்று கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/movies/interview/2011/07/ranjitha-on-kanimozhi-fate-aid0136.html

கருத்துகள் இல்லை: