சனி, 16 ஜூலை, 2011

மாமல்லபுரத்திற்கு கருணாநிதி திடீர் பயணம்

தி.மு.க., தலைவர் கருணாநிதி, தனியே மாமல்லபுரத்தில் ஓய்வெடுக்கச் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதி கடந்த சில தினங்களாக காலை, அறிவாலயம் வந்தார்; கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். காலை, அவர் அறிவாலயம் வரவில்லை; மாமல்லபுரம் சென்றார். அங்கு வழக்கமாக தங்கும் பீச் ரிசார்ட்டில் தங்கினார். அவருடன், அவரது உதவியாளர் சண்முகநாதன் மட்டும் சென்றார். வழக்கமாக அவர் மாமல்லபுரம் செல்லும் போது, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உட்பட யாரேனும் செல்வர். நேற்று யாரும் செல்லவில்லை. ஓட்டலில் ஓய்வெடுத்து விட்டு, மாலை 5.45 மணிக்கு சென்னை திரும்பினார்.
வழக்கமாக முக்கியப் பிரச்னையின் போது, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசிக்க கருணாநிதி, மாமல்லபுரம் செல்வது வழக்கம். இன்று தனியே சென்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனிமையில் ஓய்வெடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=276020

கருத்துகள் இல்லை: