வியாழன், 7 ஜூலை, 2011

கலாநிதி மாறன், சக்சேனா மீது நித்யானந்தா சீடர் போலீசில் புகார்

சென்னை, ஜூலை.7: சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோருக்கு எதிராக நித்யானந்தா பீடத்தின் சென்னை நிர்வாகி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
நித்யானந்தா மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இருவரும் செயல்பட்டதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து விரிவாகப் பேச உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே எந்திரன் பட விநியோகத்தில் மோசடி செய்ததாக சக்சேனாவுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.dinamani.com

கருத்துகள் இல்லை: