செவ்வாய், 19 ஜூலை, 2011

கலா‌நி‌தி மாற‌ன் ‌மீதான புகா‌ரை விசா‌ரி‌க்க த‌னி‌ப்படை- ‌காவ‌ல்துறை ஆணைய‌ர் தி‌ரிபா‌தி

சன் டிவி மீதும், அதன் தலைவர் கலாநிதி மாறன் மீதும் வந்துள்ள புகார்கள் பற்றி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக செ‌ன்னை காவ‌ல்துறை ஆணைய‌ர் ‌தி‌ரிபா‌தி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், சக்சேனா மீது இதுவரை ஏராளமான புகார்கள் வந்துள்ளன எ‌ன்றா‌ர்.

படத் தயாரிப்பாளர்கள், நடிகை ரஞ்சிதா உள்ளிட்டோர் அளித்துள்ள அந்த புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த திரிபாதி, ஏராளமான புகார்கள் வந்துள்ள போதிலும், சக்சேனா மீது இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், மற்ற புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

ச‌க்சேனா மீது குண்டர் சட்டம் பாயுமா? என்ற கேள்விக்கு, விசாரணை அதிகாரிகள் அது குறித்து பரிந்துரைத்தால்தான் குண்டர் சட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்று ‌தி‌ரிபா‌தி கூ‌றினா‌ர்.

சன் டிவி மீதும் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் உட்பட ஏராளமானோர் புகார்கள் அளித்துள்ளனர். அந்த புகார்கள் எந்த நிலையில் உள்ளன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த புகார்கள் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவ‌ல்துறை ஆணைய‌ர் திரிபாதி பதிலளித்தார்
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/19/1110719042_1.htm

கருத்துகள் இல்லை: