திங்கள், 4 ஜூலை, 2011

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? : உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை

ராமநாதபுரம் : தமிழக மீனவர்களை பிடித்து செல்லும் இலங்கை கடற்படையினருடன் சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்திய உளவு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இலங்கை கடற்படை அவ்வப்போது தமிழக மீனவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம் 23 மீனவர்களை பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைபடி, மத்திய அரசு தலையிட்டதால் விடுவிக்கப்பட்டனர். நேற்றும் 14 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். தமிழக மீனவர்களை பிடிக்க வரும் இலங்கை கடற்படை கப்பலில் சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி தமிழக கியூ பிரிவு, டிடாச்மென்ட், மெரைன் போலீசார் மற்றும் மத்திய அரசின் "இன்டலிஜென்ஸ் பீரோ' ஆகிய உளவு பிரிவினர் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர். கடந்தாண்டு கச்சத்தீவில் சீன வீரர்கள் முகாமிட்டிருந்ததை அங்கு திருவிழாவிற்கு சென்ற தமிழக மீனவர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படை கப்பலில் வரும் சீன வீரர்கள் தமிழக எல்லை பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கண்காணித்து வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=269363

கருத்துகள் இல்லை: