வெள்ளி, 22 ஜூலை, 2011

டயானா மரணம் குறித்து மீண்டும் விசாரணை: தகவல்

லண்டன்: இங்கிலாந்து இளவரசி டயானாவின் மரணம் குறித்த மீண்டும் விசாரணை செய்ய பிரெஞ்ச் கோர்ட் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் வருடம் பிரான்சில் நடந்த கார் விபத்தில் பலியானார். இந்த வழக்கை தற்போது மீண்டும் விசாரிக்க பிரான்ஸ் கோர்ட் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் ஸ்காட்லாந்து முன்னாள் தலைமை அதிகாரி லார்ட் கோண்டன், முன்னாள் லண்டன் துணை கமீஷ்னர் சர் டேவிட் வெனீஸ் ஆகியோரிடம் விசாரணை செய்ய பிரான்ஸ் நீதிபதி ஜெரார்டு காடியோ திட்டமிட்டுள்ளதாகவும் டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=280319

கருத்துகள் இல்லை: