வெள்ளி, 8 ஜூலை, 2011

மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாறுகிறது

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்திற்கு பெங்கால், பங்கா, பங்ளா என பெயர் சூட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அம்மாநில தொழில்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி கூறுகையில், பல மாநிலங்கள் தங்களது பெயரை மாற்றியுள்ளன. தற்போது எங்கள் முறை வந்துள்ளது. நாங்கள் பல பிரச்னைகளை சந்தித்துள்ளோம். எ‌னவே பெயரை மாற்றுவதே நல்லது என நினைக்கிறோம் என கூறினார். முன்னர் ஆட்சி செய்த இடதுசாரி ஆட்சியிலும் மாநிலத்தின் பெ‌யரை மாற்ற முடிவு செய்யப்பட்டு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த தீர்மானம் செயல்படுத்தப்படவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் பீமன்போஸ் கூறுகையில், மாநிலத்தின் பெயரை மாற்றுவது என்பது கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவு. எனவே பெயர் மாற்றத்தை எதிர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறினார். பெயர் மாற்றுவது குறித்து எதிர்கட்சி மற்றும் சமூக ஆர்வலர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=271690

கருத்துகள் இல்லை: